தமிழகம் உளியாகட்டும்: கார்ப்பரேட் காவி பாசிசம் பலியாகட்டும்- மக்கள் அதிகாரம்

/files/detail1.png

தமிழகம் உளியாகட்டும்: கார்ப்பரேட் காவி பாசிசம் பலியாகட்டும்- மக்கள் அதிகாரம்

  • 0
  • 0

 

மீண்டும் தொடங்கிவிட்டன சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள். நாற்ற நட்ட நிலத்தை குழிபறித்துக்கொண்டிருக்கின்றன எரிவாயுக்குழாய்கள். கடந்த ஐந்தாண்டில் செய்ததைவிட தீவிரமாக நம் மீது பாய்ந்து குதறுவார்கள். இயற்கை வளங்களை கொள்ளையடிப்பார்கள் என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவ்வியக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பல நண்பர்களும் நேரிலும் அலைபேசி, வாட்ஸ் அப் மூலமாக கேட்கின்ற கேள்வி இது ’இவ்வளவு பிராடுத்தனம் செய்து ஜெயிச்சாட்டங்களே, மோடியை வீழ்த்தவே முடியாதா?’ கோபம் கொப்பளிக்க பலரும் இதைப்பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அய்யோ மோடி மீண்டும் வந்துவிட்டார், இனி என்ன செய்யப்போகிறாரோ என்ற அச்சம் ஒரு பக்கமிருக்க, கம்பளிப்பூச்சி உடலில் ஓடுவது போன்ற உணர்வில் மக்கள் இருக்கிறார்கள். என்னால் கழுவி கழுவி ஊற்றப்பட்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர முடியுமென்றால் நான் ஓட்டுப்போட்டது வீணா? என்கிறார்கள் பலர்.

பாசிஸ்டுகளை தேர்தலில் வீழ்த்த முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. அரசின் ஒவ்வொரு கட்டுமானத்திலும் திட்டமிட்டு கடந்த ஐந்தாண்டில் ஏற்படுத்திய மாற்றத்தின் விளைவே இந்த வெற்றி.

மீண்டும் தொடங்கிவிட்டன சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள். நாற்று நட்ட நிலத்தை குழிபறித்துக்கொண்டிருக்கின்றன எரிவாயுக்குழாய்கள். கடந்த ஐந்தாண்டில் செய்ததைவிட தீவிரமாக நம் மீது பாய்ந்து குதறுவார்கள். இயற்கை வளங்களை கொள்ளையடிப்பார்கள். மக்கள் மீது கடும் அடக்குமுறையை ஏவுவார்கள். எல்லாமே முடிந்துவிட்டதா என்று அவநம்பிக்கை கொள்வதற்கில்லை. பாசிச பிஜேபிக்கு எதிராக பல்வேறு அமைப்புக்கள் செய்த எண்ணிலடங்கா போராட்டங்கள்தான் நாம் நின்று போராடுவதற்கு, கால் ஊன்றி எதிர்த்து நிற்பதற்கான தமிழ்நாட்டை கொடுத்து இருக்கிறது.

ஸ்டெர்லைட்டின் அகர்வாலும் அம்பானி, அதானியும் மலைகளாய்ச் சிரிக்கிறார்கள் தாங்கள் வென்றுவிட்டோம் என்று! பாசிச முசோலினி – இட்லரை வீழ்த்திய வரலாற்றை மீண்டும் மீண்டும் படிப்போம். ஒற்றை மனிதனாக இருந்து பார்ப்பனீயத்தின் அடிவேரை பிடித்தாட்டிய பெரியாரின் வரலாற்றைப்படிப்போம். மனித சமூகம் தான் முன்னேறுவதற்கு ஏற்படும் மலையென குவிந்த தடைகளனைத்தையும் உடைத்தே வந்திருக்கிறது. பாசிச பாஜக ஒழிக என்று உரக்கச்சொன்ன சோபியாக்களின் பூமி இது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave Comments

Comments (0)