பயங்கரவாதச் சட்டங்களை நீக்கக்கோரி தமிழ் மக்கள் போராட்டம்

/files/detail1.png

பயங்கரவாதச் சட்டங்களை நீக்கக்கோரி தமிழ் மக்கள் போராட்டம்

  • 0
  • 0

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் தடைச் சட்டத்தை  நீக்கக் கோரி யாழ்மாவட்டத்தில் போராட்டம் ஒன்று தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பானத்தில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில்,   அரசியல் கைதிகளை விடுதலை செய், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தது.

alt text

இலங்கையில் சுமார் நாற்பது வருடங்களாகத் தொடர்ந்து நடைமுறையில் உள்ள கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தால்   சிறுபான்மைச் சமூகம் திட்டமிட்டு  துன்புறுத்தப்பட்டு வருகின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போர் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டங்கள் விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்த பின்பும் இன்று வரையில் அது நீக்கப்படாமல் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

alt text

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை காரணம் காட்டி   தமிழ் அரசியல் கைதிகள் 30 வருடங்களுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என  ஐநா உள்ளிட்ட மனித உரிமை அமைப்புக்கள் இலங்கையை வலியுறுத்தி வருகின்ற போதும் இலங்கை அரசு அதைக்கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றது.

மேலும் இந்த பயங்கரவாத சட்டங்களினால் கைது செய்யப்படும் தமிழர்களுக்கு எதிராக காவல் நிலையங்கள், சிறைச்சாலைகள், முகாம்கள், மனநல மருத்துவமனைகளில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம்சுமத்தியுள்ளன.

Leave Comments

Comments (0)