தமிழக மக்கள் மோடிக்குப் பாடம் புகட்டியுள்ளனர்- திருமாவளவன்

/files/detail1.png

தமிழக மக்கள் மோடிக்குப் பாடம் புகட்டியுள்ளனர்- திருமாவளவன்

  • 0
  • 0

 

நாடாளுமன்றத் தேர்தலில், தமிழக மக்கள் மோடிக்குப் பாடம் புகட்டியுள்ளனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  தலைவர் திருமாவளவன், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம், காட்டு மன்னார் கோவிலில் நேற்று (ஜூன் 09) நடைபெற்றது.

அப்போது பேசிய திருமாவளவன், ” தோல்வியைக் கண்டு தாம் ஒருபோதும் பயந்தது இல்லை, கண்கள் கலங்கியதும் இல்லை.  தமது வெற்றிக்கு காட்டுமன்னார் கோவில் தான் காரணம்.  தமிழகத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிலையிலிருந்த மோடிக்கு, தமிழக மக்கள் பாடம் புகட்டியுள்ளனர் என்று பேசிய அவர், நான் வன்னியர் சமூகத்திற்கு எதிரானவன் என்று ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். இந்த மேடையில் இருக்கும் பெரும்பாலானோர் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர்கள்தான் என்று அவர் கூறினார். மேலும், தமக்கு எதிராக உள்ள தமிழ்நாட்டின் மீது பிரதமர் நரேந்திர மோடி வஞ்சம் வைத்துள்ளார். அதன் காரணமாகவே காவிரி டெல்டா மாவட்டங்களைக் குறிவைத்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றப் பார்க்கிறது” என்று கூறினார்.

Leave Comments

Comments (0)