தமிழக மீனவர் குழு இலங்கைக்குப் பயணம்

/files/detail1.png

தமிழக மீனவர் குழு இலங்கைக்குப் பயணம்

  • 0
  • 0

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்கு சொந்தமான படகுகளை எடுத்து வருவதற்காக  மீனவர் குழுவொன்று இலங்கைக்குச் சென்றுள்ளது.

தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடல் பகுதிக்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தி இலங்கை கடற்படை, மீனவர்களை கைது செய்தும் அவர்களின் படகுகளை  பறிமுதல் செய்தும்   வருகின்றது.

இவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்களையும், படகுகளையும்  சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் கடற்படை போலீஸார் ஊடாக  ஒப்படைத்து வருகின்றது.

இந்நிலையில், தமிழக மீனவர்களின் 23 படகுகளை  இலங்கை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

குறித்த படகுகளை எடுத்து வருவதற்காக 9 படகுகளில் 53 பேர் கொண்ட  மீனவ குழுவொன்று இலங்கை சென்றுள்ளது.

Leave Comments

Comments (0)