என்னைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் -  பியூஷ் மானுஷ் 

/files/detail1.png

என்னைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் -  பியூஷ் மானுஷ் 

  • 0
  • 0

 

என்னைச் செருப்பால் அடித்த பாஜக தொண்டர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சூழலியல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் தெரிவித்துள்ளார். 

சேலத்தில் மாவட்டம், மரவனேரியில் செயல்பட்டுவரும் பாஜக அலுவலகத்திற்கு சூழலியல் ஆர்வலர் பியூஸ் மானுஷ் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 28) சென்று, மத்திய அரசின் பொருளாதார கொள்கை, பொருளாதார மந்த நிலை, காஷ்மீர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்.  இதனால் கோபமடைந்த பாஜகவினர் பியூஸ் மானுஷை கடுமையான வார்த்தைகளில் பேசி, காவல்துறையினரின் கண்முன்னரே செருப்பால் சரமாரியாகத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த பியூஷ் மானுஷ் மயங்கி விழுந்துள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தற்போது பியூஷ் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய அரசின் திட்டங்களில் தவறு இருப்பதால் அதனை விமர்சித்து வருகிறேன். இதற்காக அக்கட்சியினர் என்னை எவ்வளவு அவதூறாகப் பேசினாலும் ஏற்றுக்கொள்வேன். ஆனால் எனது மனைவி, குழந்தைகளைப் பற்றி மிகவும் அருவருக்கத்தக்க வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து விளக்கம் கேட்கவும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை, அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை, ஜம்மு காஷ்மீர்  பிரச்னை ஆகியவற்றைப் பற்றி விசாரிக்கவும் பாஜக அலுவலகத்திற்குச் சென்றேன். அங்கிருந்தவர்கள் என்னைத் திட்டி செருப்பு மாலை அணிவித்து, செருப்பால் அடித்தனர். 10க்கும் மேற்பட்டோர் என்னைச் சூழ்ந்து கொண்டு கொடூரமாகத் தாக்கினர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.

Leave Comments

Comments (0)