தங்கம் வென்றார் மல்யுத்த வீரர் சுஷில் குமார்

/files/detail1.png

தங்கம் வென்றார் மல்யுத்த வீரர் சுஷில் குமார்

  • 0
  • 0

-வித்யா

தங்கம் வென்றார் மல்யுத்த வீரர் சுஷில் குமார்

காமன்வெல்த் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் மூன்றாவது முறையாகத் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் சுஷில் குமார் ஹாட்ரிக் சாதனைப் படைத்துள்ளார். 

21ஆவது காமன் வெல்த் போட்டி கடந்த 4ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் கோல்டு  கோஸ்ட் நகரில் தொடங்கியது. 11 நாள்கள் நடக்கும் இந்தக் காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பளுதூக்குதல், துப்பாக்கிச் சுடுதல் போட்டியைத் தொடர்ந்து மல்யுத்த போட்டியில் இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்திய அணி பதக்கப்பட்டியலில் மூன்றாவது  இடத்தைத் தக்கவைத்துள்ளது. 

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 12) நடைபெற்ற மல்யுத்த போட்டியில் ஆடவர் 74 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் சுஷில் குமார் தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதுவரை இந்தியா 14 தங்கப் பதக்கமும், 6 வெள்ளி  பதக்கமும், 9 வெண்கல பதக்கமும்  பெற்று  மொத்தம் 29 பதக்கங்களுடன் மூன்றாவது  இடத்தில்  உள்ளது . 150 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் 82 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளது. 

சுஷில் குமார் ஒலிம்பிக் போட்டியில் ஒரு வெண்கலம், வெள்ளி பதக்கத்தையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

\r\n

Leave Comments

Comments (0)