ஊதியம் வழங்காத சர்க்கரை ஆலையைக் கண்டித்து போராட்டம்

/files/detail1.png

ஊதியம் வழங்காத சர்க்கரை ஆலையைக் கண்டித்து போராட்டம்

  • 0
  • 0

 

12 மாதமாக ஊதியம் வழங்காத சர்க்கரை ஆலையைக் கண்டித்து கடலூர் மாவட்டத்தில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் இறையூரில் ஆரூரான் சர்க்கரை ஆலைக் குழுமத்தின் `ஸ்ரீ அம்பிகா சர்க்கரை ஆலை` செயல்ப்பட்டுவருகிறது. இந்த ஆலை நிர்வாகம் அங்கு பணிபுரியும் 250 தொழிலாளர்களுக்குக் கடந்த பனிரெண்டு மாதங்களாகச் சம்பளம் வழங்கவில்லை. இந்த சம்பளப் பாக்கியால் ஒருபுறம் தொழிலாளர்கள் கஷ்டப்பட்டுவருகிறார்கள். மறுபுறம் விவசாயிகளுக்கு 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வைத்திருக்கிறது இந்த ஆலை. இதில் பெரும் நெருக்கடிகளுக்காளாகி இருப்பவர்கள் சிறுவிவசாயிகள். அவர்களில் கணிசமானவர்கள் தலித்துகள். இந்த பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறார் அவ்வாலையின் தலைவர் ராம் தியாகராஜன். 

ஊதியத்தை வழங்கக்கோரி தொழிலாளர்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித பயனும் இல்லை. இந்நிலையில், `ஆரூரான் குழுமத்தின் அத்தனை சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட வேண்டும், விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் சேரவேண்டிய நிலுவைத் தொகை இரட்டிப்பாக அளிக்கப்பட வேண்டும், ஆரூரான் குழுமத்தின் பிற நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசே நடத்த வேண்டும், தனி விசாரணை செய்து, ஆரூரான் குழுமத்தின் குற்றங்கள் கண்டறியப்பட்டு தண்டனையளிக்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலையின் நுழைவாயிலில் கஞ்சி காய்ச்சி தொழிலாளர்கள் கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  
 

Leave Comments

Comments (0)