நச்சுப்புகை வெளியேறும் ஆலையை மூடக்கோரிய போராட்டம் 

/files/detail1.png

நச்சுப்புகை வெளியேறும் ஆலையை மூடக்கோரிய போராட்டம் 

  • 0
  • 0

 

திருப்பூர் மாவட்டத்தில், இறைச்சிக் கழிவுகளை அரைக்கும் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருப்பூர் மாவட்டம், தாராபுரம், இடையன் கிணறு பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கோழித்தீவனம் அரைப்பதாகக் கூறி தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தனர். ஆனால் அந்த ஆலையில் கோழிக் கழிவுகளையும், மாட்டு இறைச்சி கழிவுகளையும் அரைத்து தீவனம் தயாரிப்பில் ஈடுபட்டுவருவதாகக் கூறப்படுகிறது. அந்த பணியின்போது வெளிவரும் நச்சு கழிவுகளால் அப்பகுதியில் வசித்துவரும் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிவருகின்றனர். அதனால் அந்த ஆலையை வேறு பகுதியில் செயல்படுத்தக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் அந்த ஆலை தொடர்ச்சியாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனால் இன்று (மே 27) இறைச்சிக் கழிவுகளை அரைக்கும் நிறுவனத்தை அப்பகுதியிலிருந்து அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 
 

Leave Comments

Comments (0)