பல் குழல் பீரங்கிகளைத் தயாரிக்கும் இலங்கை

/files/detail1.png

பல் குழல் பீரங்கிகளைத் தயாரிக்கும் இலங்கை

  • 0
  • 0

கடந்த 4ம் திகதி இலங்கையின் சுதந்திரதின நிகழ்வு காலிமுகத்திடலில் நடைபெற்றது. இதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பத்து குழல்களைக்கொண்ட பல்குழல் பீரங்கி  முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், பத்து குழல்களைக்கொண்ட பல்குழல் பீரங்கி, 20 கிலோ மீட்டர் சென்று இலக்குகளைத்தாக்கும் வல்லமை கொண்டதென்றும் அதற்கான குண்டுகளும் இலங்கையிலேயே தயாரிக்கப்படுவதாகவும் இலங்கை மற்றும் இராணுவத்தின் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் திரான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

சுமார் 70 இலட்சம் ரூபா செலவில் இந்த பல்குழல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் சீனா ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட குண்டுகளைக்கொண்டும் இந்த பீரங்கியால் தாக்குதல் நடத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் 40 குழல்களைக்கொண்ட பல்குழல்களை தயாரிக்க முடியும். முதற்கட்டமாக 20 குழல்களைக்கொண்ட பல்குழல்களையே தற்போது தயாரிக்க உள்ளோம் என்றார் பிரிகேடியர் திரான் டி சில்வா.

இலங்கை இறுதிப்போரில்  அரச படையினரின் பல்குழல் தாக்குதல்களில் அதிகளவிலான மக்கள் படுகொலை செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. அக்காலப்பகுதிகளில் இராணுவத்தளபாடங்களை வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் இலங்கை அரசு இறக்குமதி செய்து வந்தது.

Leave Comments

Comments (0)