மாலைதீவில் இலங்கை இளைஞர் ஒருவர் படுகொலை

/files/detail1.png

மாலைதீவில் இலங்கை இளைஞர் ஒருவர் படுகொலை

  • 0
  • 0

மாலைதீவில் இலங்கையர் ஒருவர் கைத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அவரின் குடும்பத்தினர் காவல்துறையில் முறையிட்டுள்ளனர்.

24 வயதுடைய தில்ஷான் என்பவரே இவ்வாறு கத்தியால் குத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டவராவார்.

கடந்த ஆண்டு புகைப்பட கலைஞராக மாலைதீவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த தில்ஷான், அங்கு இலங்கையைச்சேர்ந்த இளைஞர்களினால் அவமதிப்பு செய்யப்பட்டதாக உறவினர்களினால் முறையிடப்பட்டுள்ளது.

தில்ஷான் , மாலைதீவில் 5 இளைஞர்களுடன் ஒரே  அறையில் தங்கியிருந்ததாக கூறப்படும் நிலையில், கத்தியால்  குத்தப்பட்டு தில்ஷான்  இறந்துவிட்டதாக  அவரது சகோதரனுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.  இதையடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக இலங்கை காவல்துறை விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

Leave Comments

Comments (0)