வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு இலங்கை எச்சரிக்கை

/files/detail1.png

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு இலங்கை எச்சரிக்கை

  • 0
  • 0

 

இலங்கையில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்கள், மனித வியாபாரத்தில் ஈடுபடுமானால், குறித்த நிறுவனங்களின் அனுமதி சான்றுகள் இரத்து செய்யப்படும் என  வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு எச்சரித்துள்ளது.

சவுதி அரேபியாவில் நிர்க்கதியான நிலையில்   நலன்புரி நிலையத்தில் பல பெண்கள் தங்கியுள்ளனர் என சமூகவலைத்தளங்களில் காணொலி ஒன்று வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப்பெண்களுக்கான ஊதியமும் வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகின்றது.

இந்நிலையில், இது தொடர்பில் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு கண்காணிப்பு அமைச்சர் ஹெக்டர் அப்புஹாமி கொழும்பில்   இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில்   கருத்து  தெரிவிக்கையில்,

வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்கள், இதற்கு முன்னர் மனித வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தநிலையில், அவற்றின் அனுமதி இரத்து செய்யப்படவில்லை.மாறாக அந்த நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, தொடர்ந்தும் இயங்க அனுமதிக்கப்பட்டன.

இனிவரும் காலங்களில் மனிதக் கடத்தலில் ஈடுபடும் நிறுவனங்கள் தடைசெய்யப்படுவது தொடர்பான சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்  சவுதி நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள பெண்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

Leave Comments

Comments (0)