இந்தியாவில் உள்ள ஈழ அகதிகளை சந்திக்க இலங்கை உயர் ஆணையர் திட்டம்

/files/detail1.png

இந்தியாவில் உள்ள ஈழ அகதிகளை சந்திக்க இலங்கை உயர் ஆணையர் திட்டம்

  • 0
  • 0

 

இந்தியாவில் தங்கியிருக்கும் அனைத்து இலங்கை தமிழ் அகதிகளையும்   மீண்டும்   நாட்டுக்கு அழைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று இலங்கை அறிவித்துள்ளது.

இலங்கையில் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தினை தொடர்ந்தும்  அதைத் தொடர்ந்து நடைபெற்ற  போரின்  காரணமாகவும் சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்தனர். அதில் சுமார் 1 லட்சம் அகதிகள் இன்றும் தமிழ்நாட்டிலேயே வசித்து வருகின்றனர். 

இந்நிலையில்,புது தில்லியில் தென் ஆசிய வெளிநாட்டு பத்திரிகையாளர் சங்கத்தின் ஒருங்கிணைத்த நிகழ்வில் பேசிய இந்தியாவுக்கான இலங்கை உயர் ஆணையர் ஆஸ்டின் பெர்னாண்டோ, இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கைக்குள் எடுத்துக்கொள்ள எண்ணுவதாக தெரிவித்துள்ளார்.

சுமார் 5,000 அகதிகள் இலங்கைக்கு திரும்பியுள்ளனர் எனக் கூறிய அவர், இப்போது அகதிகள் அனைவரும் சொந்த நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என விரும்புவதாகவும்   கூறியுள்ளார்.

 தமிழ்நாட்டில் உள்ள 1 லட்சம் அகதிகளில் 20 முதல் 30 சதவீதம் பேர் இந்தியாவிலேயே வசிக்க விரும்புவதாக கூறியுள்ள இலங்கை உயர் ஆணையர் ஆஸ்டின் பெர்னாண்டோ, விரைவில் அகதிகளை சந்திக்கயிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 ஈழ அகதிகளை திரும்பப் பெற்றுக் கொள்ள இலங்கை அரசு ஏதேனும் கால எல்லை வைத்துள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அது போன்ற எந்த கால அளவும் கிடையாது. அதே சமயம், அகதிகளை கூடிய விரைவில் திரும்பப் பெற்றுக்கொள்வோம் என்று கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை இடையே அகதிகள் திரும்புவது தொடர்பான பேச்சுவார்த்தை நடக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave Comments

Comments (0)