உலக நாடுகளுக்கு இலங்கை அழைப்பு

/files/detail1.png

உலக நாடுகளுக்கு இலங்கை அழைப்பு

  • 0
  • 0


இலங்கை அரசாங்கம் 2030ஆம் ஆண்டளவில் நாட்டின் வன அடர்த்தியை 29 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாக அதிகரிப்பதற்கு “வனரோபா” தேசிய மரநடுகை திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையின் பசுமை திட்டங்களின் முன்னேற்றத்தை பார்ப்பதற்கு உலகத் தலைவர்களை அன்புடன் அழைக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் இடம்பெற்ற ஆசிய பசுபிக் பிராந்திய சுற்றாடல் துறை அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் துறை நிறுவனங்களின் மூன்றாவது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

ஆசிய பசுபிக் பிராந்திய பங்காளர் என்ற வகையில் இந்த கூட்டத்தின் பெறுபேறுகள் எதிர்வரும் ஐ.நா சுற்றாடல் பேரவை கூட்டத்தொடருக்கான பெறுமதியான பிராந்திய கண்ணோட்டங்களை வழங்கும் என்று இலங்கை நம்புகிறது.  

மேலும் இலங்கை மற்றும் சிங்கப்புருக்கு இடையிலான சுத்திர வர்த்தக ஒப்பந்தத்தின் போது இலங்கை தரப்பில் சில தவறுகள் நடந்துள்ளதாகவும் அதை திருத்திக்கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாநாட்டில் சுற்றுசூழல் குறித்து அதிக முக்கியத்துவம் கொடுத்து உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave Comments

Comments (0)