இலங்கையில் ஒருமித்த நாட்டுக்குள்ளையே தீர்வு -  இரா.சம்பந்தன்

/files/detail1.png

இலங்கையில் ஒருமித்த நாட்டுக்குள்ளையே தீர்வு -  இரா.சம்பந்தன்

  • 0
  • 0

இலங்கையில் ஒருமித்த பிரிக்கப்படாத நாட்டிற்குள்ளையே ஒரு தீர்வைத் தேடுவாதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் வெளிவிவகாரப்பிரிவின் தெற்காசியத்திணைக்களத்தின் தலைவரும் இந்தியாவின் ஒருங்கிணைப்பாளருமான பர்கஸ் ஓல்ட், தமிழ்த்துசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சந்தித்து உரையாடியிருந்தனர்.

இந்த சந்திப்பில் இலங்கை அரசு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. எனவே அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அதேவேளை இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானங்களும் தொடர்ந்து முன்வைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது,

இலங்கையின் தற்போதைய சூழ்நிலைகள் குறித்து இரா. சம்பந்தன் பர்கஸ் ஓல்ட்டிடம் விளக்கம் அளித்த போது, வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதே வேளை ஜனாதிபதியும் பிரதமரும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இருவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

கொள்கை அடிப்படையில் சில முடிவுகளை எடுக்க வேண்டிய போது, ஏனையவிடையங்களில் கவனம் செலுத்த முடிவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் கரங்களில் அதிகாரங்கள் செல்லுகின்றவிடத்து ஊழல் மற்றும் வளங்களை  வீண் விரையம்  செய்வதற்கான சந்தர்ப்பங்களை அது குறைத்துவிடும். இதன் காரணமாகவே ஒரு சில அரசியல் வாதிகள் அஞ்சுகின்றனர் எனத்தெரிவித்த சம்பந்தன், நீண்டகால தேசியப்பிரச்சனைக்கு தீர்வு காணாப்படாத நிலையில், இலங்கைக்கு எதிர்காலம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave Comments

Comments (0)