தொகுப்பாளர் இஸ்லாமியர் என்பதால் கண்களை மூடிக்கொண்ட இந்து அமைப்பு நிறுவனர்

/files/detail1.png

தொகுப்பாளர் இஸ்லாமியர் என்பதால் கண்களை மூடிக்கொண்ட இந்து அமைப்பு நிறுவனர்

  • 0
  • 0

 

'நியூஸ் 24 இந்தி' தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் முஸ்லிம் என்பதால், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்து அமைப்பைச் சேர்ந்தவர் தன் இரு கண்களை மூடிக்கொண்ட சம்பவம் நடந்திருக்கிறது.

சமீபத்தில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமித் சுக்லா என்பவர் சோமேட்டோ மூலம் உணவு ஆர்டர் செய்திருந்தார். அவருக்கு உணவு டெலிவரி செய்யும் நபர் முஸ்லிம் என்பதால், வேறு ஒருவரை டெலிவரி செய்ய அனுப்புமாறு சோமேட்டோவிடம் கேட்டுள்ளார். இதற்கு சோமேட்டோ மறுப்பு தெரிவித்து, உணவிற்கு மதம் கிடையாது. உணவே ஒரு மதம் தான் என்று கருத்து தெரிவித்தது. 

இந்த சம்பவம் நாடு முழுவதும் பேசுபொருளாக மாறிய நிலையில், நியூஸ் 24 என்ற இந்தி தொலைக்காட்சியில் இதுகுறித்த விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், ஹம் ஹிந்து என்ற அமைப்பின் நிறுவனர் அஜய் கௌதம் கலந்துகொண்டார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் ஒரு இஸ்லாமியர் என்பதால், அஜய் கௌதம் `நான் அந்த இஸ்லாமியரைப் பார்க்கமாட்டேன்` என்று தன் கைகளைக் கொண்டு இரு கண்களையும் மூடிக்கொண்டார். 

இதற்குச் செய்தி தொலைக்காட்சி உட்பட பலரும் கண்டம் தெரிவித்துவருகின்றனர். 

Leave Comments

Comments (0)