பாலியல் குற்றச்சாட்டு- இலங்கை மருத்துவருக்கு சிறைத்தண்டனை

/files/detail1.png

பாலியல் குற்றச்சாட்டு- இலங்கை மருத்துவருக்கு சிறைத்தண்டனை

  • 0
  • 0

கடந்த 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பெண்  ஒருவருக்கு  அடிவயிற்றில் ஏற்பட்ட வலி காரணமாக மருத்துவரிடம் சென்ற போது, மருத்துவர்  பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என பாதிக்கப்பட்ட பெண் முறையிட்டிருந்தார்.

இந்த குற்றச்சாட்டின் பேரில் நடைபெற்று வந்த வழக்கு விசாரைணையில்   குறித்த மருத்துவர் குற்றவாளி  என ஆஸ்திரேலியாவின் பிறிஸ்பன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அவருக்கு   ஒரு வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில்    குறிப்பிட்ட பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்றும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதற்குரிய ஆதாரங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் அந்த குற்றச்சாட்டை நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

குறித்த  வழக்கு விசாரணையில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மருத்துவர் இலங்கையைச்சேர்ந்தவர் என்றும் அறியப்படுகின்றது.

Leave Comments

Comments (0)