போரில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பாலியல் இலஞ்சம்- ஐநா பிரதிநி குற்றச்சாட்டு

/files/detail1.png

போரில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பாலியல் இலஞ்சம்- ஐநா பிரதிநி குற்றச்சாட்டு

  • 0
  • 0

இலங்கைப்போரில் பாதிக்கப்பட்டு நலிவுற்றுள்ள பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் ஜுவான் ப்பலோ போல்ஸ் விகி தெரிவித்துள்ளார்.

இலங்கை போர் முடிவுற்ற பின் வடக்கு கிழக்கு மாகாணங்களில்  உள்ள பல மாவட்டங்கள்  வறுமையைால் பாதிக்கப்பட்டுள்ளன. வறுமையில் 2ம் இடத்தில் முல்லைத்தீவு மாவட்டம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த மாவட்டங்களில் வறுமையால் வாடி வரும் மக்களுக்கு சில தனியார் வங்கிகள் கடன் உதவி செய்து வருகின்றது. அதில் சில வங்கிகள் வறுமையால் நலிவுற்றுள்ள மக்களை இனம் கண்டு, அநேகமான பெண் தலைமைத்துவ குடும்பங்களை இனம் கண்டு அவர்களுக்கு நுண் கடன் திட்டத்தின் மூலம் கடன் வழங்கி வருகின்றது.

இந்த நுண் கடன் திட்டம் என்பது ஒருகுடும்ப பொருளாதாரத்தை உயர்த்த சுயதொழிலை ஏற்படுத்த பல நிறுவனங்கள் கிராமரீதியாக பலரை உள்ளடக்கி இந்தகடனை வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாராந்த தவணையில் பெற்ற கடனுக்கு பணம் செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் வழங்கப்படும் இந்த நுண் கடன் திட்டத்தைப்பெற்றுக்கொள்ளும் குடும்ப அங்கத்தவர்கள்,  அதனைச் செலுத்த முடியாது தற்கொலை செய்யும் நிலையும் நீடித்து வருகின்றது. இவ்வாறு பணம் செலுத்த முடியாத பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரப்படுவதாக ஏற்கனவே மக்கள் மத்தியில் தகவல் வெளியாகி இருந்தது. இவ்வாறு பாலிய இலஞ்சம் கோரப்பட்டபோது அவமானம் தாங்க முடியாது சில பெண்கள் தற்கொலையும் செய்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் ஜுவான் ப்பலோ போல்ஸ் விகி, 40வது ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடருக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில்  நுண்கடன்களை பெற்றுள்ள போரில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களிடம் கடன் சேகரிப்பவர்கள் பாலியல் இலஞ்சம் கோருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக  குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது, நுண்டகடன் திட்டம் வறுமையை போக்குவதற்காக கொண்டுவரப்பட்டது. ஆனால் எந்ததொரு முன்னேற்றமும்  இலங்கையில் தெரியவில்லை.

இந்நிலையில் நுண்கடன் திட்டம், தற்போது வறுமையிலுள்ள பெண்களை குறிவைத்தே மேற்கொள்ளப்படுகின்றது. அதிலும் போரில் பாதிக்கப்பட்ட வறுமை குடும்பங்களேயே  நுண்டகடன் நிறுவனம் அதிகம் நாடுகின்றது.

அந்தவகையில் அம்மக்களுக்கு கடனை வழங்கும் நிறுவனங்கள் அதனை மீள செலுத்த முடியாத நிலைமை உருவாகும்போதும் மிகவும் தவறான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

மேலும் நுண்கடன் நிறுவன ஊழியர்கள் கடனை செலுத்தாத பெண்களிடம், பாலியல் வன்முறையில் ஈடுபட முனைவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

ஆகைாயால் இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்பதுடன் அம்மக்கள், நுண்கடன்களை மீள் செலுத்துவதனை நிறுத்த உதவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Leave Comments

Comments (0)