ஒளிப்பதிவாளர் M.J.ராதாகிருஷ்ணன் நினைவாக அவரது திரைப்படங்கள் திரையிடல்

/files/detail1.png

ஒளிப்பதிவாளர் M.J.ராதாகிருஷ்ணன் நினைவாக அவரது திரைப்படங்கள் திரையிடல்

  • 0
  • 0

 

எதிர்வரும் 21ஆம் தேதி பியூர் சினிமாவில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை ஒளிப்பதிவாளர் M.J.ராதாகிருஷ்ணனின் நினைவாக அவரது திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.

நண்பர்களே அண்மையில் மறைந்த, இந்திய சினிமாவின் மாற்று சினிமாக்களை தன்னுடைய ஒளிப்பதிவின் மூலம் பெருமைப்படுத்திய ஒளிப்பதிவாளர் M.J.ராதாகிருஷ்ணன் நினைவாக ஒரு நாள் முழுக்க அவரது ஒளிப்பதிவில் உருவான திரைப்படங்களை திரையிடுகிறது தமிழ் ஸ்டுடியோ. 

இந்திய சினிமா வரலாற்றில் நீங்காத இடத்தினை பிடித்துள்ள M.J. ராதாகிருஷ்ணன், அடூர் கோபாலகிருஷணன், முரளி நாயர் போன்றோரின் திரைப்படங்களிலும் சுயாதீன திரைப்பட கலைஞரான லீனா மணிமேகலையின் செங்கடல் திரைப்பதிலும் பணியாற்றியுள்ளார். தமது திரைப்படங்களில் செயற்கையாக ஒளிகளைப் பயன்படுத்தாமல் இயற்கையாகக் கிடைக்கும் ஒளியையே பயன்படுத்துவதில் கைதேர்ந்தவராவார்.

கான்ஸ் திரைப்பட விழாவில் பரிசினை பெற்ற பாபிலோன் புத்தா, கலியச்சன், பரிணாமம் மற்றும் வழிய சிறகுள்ள பறவைகள் ஆகிய திரைப்படங்களின் திரையிடலுடன் திணைநிலவாசிகள் நாடக்குவினரின் நாடகமும் நடைபெறவிருக்கிறது. 

இந்த ஞாயிறு முழுக்க மாபெரும் கலைஞனைக் கொண்டாடவும், இந்தியாவின் முக்கியமான சினிமாக்களை பார்க்கவும், நாடகங்கள் வழியே கலை-அரசியல் பரிமாற்றம் நிகழ்வதைப் பார்க்கவும் அவசியம் பியூர் சினிமாவிற்கு வந்துவிடுங்கள். அனைவரும் வருக, அனுமதி இலவசம்.

இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

Leave Comments

Comments (0)