70,000 ஊழியர்களிடம் பணத்தை திருப்பி கேட்கும் SBI வங்கி

/files/detail1.png

70,000 ஊழியர்களிடம் பணத்தை திருப்பி கேட்கும் SBI வங்கி

  • 0
  • 0

-V.கோபி

 

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அதிக நேரம் வேலை பார்த்ததற்காக கொடுக்கப்பட்ட பணத்தை திருப்பி அளிக்குமாறு 70000க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்களை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கேட்டுகொண்டுள்ளது.

இந்த ஊழியர்கள் அனைவரும் ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் பிக்கனீர் & ஜெய்ப்பூர் வங்கிகளைச் சேர்ந்தவர்கள். இந்த வங்கிகள் அனைத்தும் 2017ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி SBI வங்கியோடு இணைந்துவிட்டது குறிப்பிடதக்கது.

தனது வங்கி ஊழியர்களுக்கு மட்டுமே அதிக நேரம் பணிபுரிந்ததற்கான பணம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் இணைப்பிற்கு முன்பான துணை வங்கி ஊழியர்களுக்கு அளிக்ககூடாது எனவும் அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் SBI அறிவுறுத்தியுள்ளது. மேலும் மேற்குறிப்பிட்ட வங்கி உழியர்களுக்கு இதற்கு முன் பணம் கொடுத்திருந்தால் அதை திருப்பி வாங்குமாறும் கூறியுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது இந்த வங்கிகள் எதுவும் SBI வங்கியோடு இணைந்திருக்கவில்லை. ஆகவே தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியது அந்த ஐந்து வங்கிகளையே சேரும் என ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.

அதிகாரிகளுக்கு 30000ரூபாயும், அலுவலர்களுக்கு 17000ரூபாயும் ‘அதிக நேரம்’ வேலை பார்த்த சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை மார்ச் முதல் மே மாதம் வரையிலான ‘இதர செலவுகள்’ என்ற கணக்கின் கீழ் கொடுத்துள்ளனர்.

ஒரு வங்கியை இணைக்கும்போது அதனுடைய சொத்துகளும் கடன்களும் அதில் அடங்கும். ஆகவே கொடுத்த பணத்தை திருப்பி கேட்பது நியாமில்லாத செயல் என வங்கி ஊழியர்களின் சங்கம் கூறியுள்ளது.

 

Article link: https://www.moneycontrol.com/news/business/sbi-orders-70000-employees-to-return-money-paid-for-demonetisation-overtime-report-2721791.html

Leave Comments

Comments (0)