அநீதிக் கதைகள் வெளியீட்டு விழா !
January 9, 2021 - selvamani T
January 15, 2021,11:29:05 PM
-தமிழில் V.கோபி
சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறை கூறும் Karenjit Kaur: The Untold Story of Sunny Leone திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்போடு வருகிற ஜூலை 16ம் தேதி வெளியாக உள்ளது. தனது கதாபாத்திரத்தை சன்னி லியோனே ஏற்று நடித்துள்ள இப்படத்தை ஆதித்யா தத் இயக்கியுள்ளார். ஒரு சாதாரன குடும்பத்தில் பிறந்து உலகளவில் பிரபலமான ஆபாசப்பட (போர்ன்) நாயகியாகி பின்னர் பாலிவுட்டில் நடிகையான கதையை இப்படம் கூறுகிறது.
“மாறுபாடான கருத்தை” கொண்டுள்ள எதற்கும் வழக்கமாக இந்தியாவில் என்ன நடக்குமோ, அதுவே இப்படத்திற்கும் நடக்க ஆரம்பித்துள்ளது. ஆம். படம் வெளி வருவதற்கு முன்பே சமூக வலைதளத்தில் இப்படத்தை வசைபாட ஆரம்பித்துள்ளனர்.
சரி, அவர் படத்தின் மீது இவ்வுளவு வன்மம் ஏன்?
ஏனென்றால் தனது தொழிலை தன் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்தவர் சன்னி லியோன். கடும் உழைப்பாளியான லியோன், தான் எடுத்த முடிவில் உறுதியாக நிற்பதோடு தனது வாழ்க்கையை பற்றி கூறுவதற்கு கூச்சப்படாதவர். ஆபாச படத்தில் நடிப்பதோ அல்லது பாலிவுட்டில் நாயகியாக நடிப்பதோ, தனது ஒவ்வொரு வாழ்க்கை நிலையும் பொறுப்புனர்ச்சியோடும் நேர்மையோடும் ஏற்று கொண்டவர் லியோன்.
இது பற்றி பலரும் டிவிட்டரில் தெரிவித்த கருத்துகள்….
“அருவருப்பாக உள்ளது. இந்த செய்தியை கேட்டதும் அதிர்ச்சியாக உள்ளது. அப்படி என்ன சிறப்பானதை சன்னி லியோன் செய்துவிட்டார் என்று அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறார்கள். நமது இளைஞர்கள் நிலைமை என்னவாகும். நியுட்டன், ராமானுஜம் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறே நமக்கு தேவை”
---அர்ச்சனா பல்லா, #SunnyLeoneBiopicOnZEE5
“ராமானுஜம் படம் சமூக வலைதளத்தில் எப்போதாவது டிரெண்டிங் ஆனதுண்டா? இந்த நாட்டின் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பதே நல்லது”.
--பிரபாத் மிஷ்ரா, #SunnyLeoneBiopicOnZEE5
“ஏற்கனவே அவரது ‘முழுமையான’ வாழ்க்கையை தனிமையாக வீடியோவில் பார்த்திருப்பீர்கள். ஏற்கனவே பல காலத்திற்கு முன்பு ‘காண்பித்ததை’ மீறி தணிக்கை வாரியமும் ஜீ நிறுவனமும் புதிதாக எதையும் காண்பிக்க போவதில்லை. இனி சிகப்பு விளக்கு பகுதிகளில் உள்ள அனைவரின் வாழ்க்கை வரலாறும் வருமோ என்னவோ?”
--Dr.ஷைலேஷ் உபாத்யா, #SunnyLeoneBiopicOnZEE5
“ஆபாசப்படத்தில் நடிக்கும் ஒருவர் எப்படி புகழ்பெற்றவராக இருக்க முடியும் என நினைக்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. இதுபோன்ற வாழ்க்கை வரலாற்று படத்தை பார்க்க எப்போதும் விரும்பியதில்லை”
--அங்கித் ஷர்மா, #SunnyLeoneBiopicOnZEE5
இப்படி வசைபாடுவது மட்டுமின்றி, தங்களது அற கோட்படுகளையும் அடுத்தவர் மீது திணிக்க தொடங்குகிறார்கள். ஆனால் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளியான சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறை கூறும் Sanju படம் வெளியாகி கோடிக்கனக்கான ரூபாய் வசூல் செய்த போதும், படத்தில் தான் 350 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்துள்ளேன் என்று சஞ்சு கூறும் போதும் இந்த அற காவலர்கள் எல்லாம் எங்கு போனார்கள் என தெரியவில்லை.
“மக்கள் போலியனவர்கள். இரட்டை வேடம் போடுபவர்கள். ஆபாச படத்தில் நடித்தவருக்கு வாழ்க்கை வரலாறா என அவர்களால் கிரகிக்க முடியவில்லை. ஆனால் அதே நேரம் 350 பெண்களிடம் படுக்கையை பகிர்ந்துள்ளேன் என கூறும் நடிகரை புகழ்கிறார்கள். பாசாங்கு செய்வது நமது ரத்தத்தில் ஊறியுள்ளது”.
---ஆகாஷ் ஜெயின், #SunnyLeoneBiopicOnZEE5
ஒருவரின் படத்தை விமர்சனம் செய்யவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் இயக்குனர் இந்த படத்தை தான் எடுக்க வேண்டும் என யாரும் அவருக்கு உத்தரவு போட முடியாது. அவரின் அடிப்படை உரிமை மீது யாரும் கேள்வி கேட்க முடியாது.
இப்படியான வசை தூற்றல் மட்டும் சன்னி லியோன் படத்தை பாதிக்கவில்லை. இப்படத்தின் தலைப்பில் உள்ள கவுர் (Kaur) என்ற வார்த்தையை நீக்குமாறு டெல்லி சீக்கிய குருத்துவாரா நிர்வக கமிட்டி படத்தின் தயாரிப்பாளரிடம் கேட்டு கொண்டுள்ளது.
“ஒரு போர்ன் ஸ்டார் நடிக்கும் படத்தில் இந்த Kaur வார்த்தையை உபயோகித்திருப்பது உலகம் முழுவதிலும் உள்ள சீக்கியர்களை இழிவு படுத்துவதற்கு சம்மாகும்” என சீக்கிய அமைப்பின் செயலாளர் மஞ்சிந்தர் சிங் கூறியுள்ளார்.
Karenjit Kaur என்பது சன்னிலியோனின் இயற்பெயர். அவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் இப்பெயரை உபயோகிக்க அவருக்கு முழு உரிமை உள்ளது. அவர் பெயர் ஒன்றும் சொத்து அல்ல, எல்லாரும் சொந்தம் கொண்டாட. மேலும் ஹனி சிங் என்ற பாடலாசிரியர் பெண்களை பற்றி இழிவாகவும் வன்புணர்வை பிரச்சார படுத்தியும் பாடல் எழுதும் இவரை யாரும் குறைகூறியதில்லை. இவரும் தனது பெயரில் ‘சிங்’ என்பதை இன்றுவரை உபயோகித்தே வருகிறார்.
“#Kaur என்பது இங்கு பிரச்சனையில்லை. சன்னி லியோன் ஆபாச படத்தில் நடிப்பவர். ஆகையால் அவரது படம் சீக்கிய மதத்தை இழிவு படுத்துகிறது என கூறினால், ஓ மனிதர்களே! நீங்கள் ஆண்மீக ஆத்மா என கூறிக்கொள்வதற்கு தகுதியுடையவர்கள் கிடையாது”.
---பாதகி ஆத்மா, #KaenjitKaur
சன்னி லியோனின் படத்திற்கு வரும் எதிர்ப்பை பார்க்கும்போது, இந்தியாவில் அற மதிப்பீடுகளும் நியாங்களும் எப்படி நபருக்கு நபர் வித்தியாசப்படுகிறது குறிப்பாக பெண்கள் விஷயத்தில் என்பதை புரிந்து கொள்ளலாம். இவர்களுக்கு புரிய வைப்பது முடியாத காரியம். இப்போது நம்மால் செய்யக்கூடியது, இச்செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதும் சன்னி லியோனுக்கு ஆதரவு தெரிவிப்பதுமே.
நன்றி https://www.vagabomb.com/Sunny-Leone-Biopic-Controversy/
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Leave Comments