சம்பந்தன் பதவி மோகம் கொண்டவர்- மகிந்த காட்டம்

/files/detail1.png

சம்பந்தன் பதவி மோகம் கொண்டவர்- மகிந்த காட்டம்

  • 0
  • 0

 

முன்னாள் எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனும் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவைப் போன்று  பதவி மோகம் கொண்டவர் என இலங்கையின் எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்சே சாடியுள்ளார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனின் பேச்சை கேட்டு, நாளுமன்றத்தின் சம்பிரதாயத்தையும் சபாநாயகரையும் அவமதித்துப்பேசம் சம்பந்தன், நாளைக்கு நீதிகோரி உயர்நீதிமன்றம் செல்லவும் கூடும் எனத்தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணிலின் பாணியில் சம்பந்தனும் தமது பதவிக்கு எதிராக சட்ட நடிவடிக்கை எடுத்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிடம் இருந்து எதிர்க்கட்சிப்பதவியைப்பறித்து அரசின் அங்கமான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் மகிந்த ராஜபக்சேவிடம் ஒப்படைத்துள்ளதாக இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் குற்றம்சுமத்தியிருந்தார்.

இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்சே, எதிர்க்கட்சிப்பதவியை நான் கேட்டுவாங்கவில்லை. சம்பந்தன் போன்று பதவி ஆசை எனக்கில்லை, ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பரிந்துரையின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்களுக்கு அமைய எதிர்க்கட்சித்தலைவர் பதவியை சபாநாயகர் தனக்கு வழங்கியுள்ளார் என மகிந்த தெரிவித்துள்ளார்.

Leave Comments

Comments (0)