மகிந்த மீது கூட்டமைப்பின் தலைவர் குற்றச்சாட்டு

/files/detail1.png

மகிந்த மீது கூட்டமைப்பின் தலைவர் குற்றச்சாட்டு

  • 0
  • 0

இலங்கை இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வுத்திட்ட யோசனைகளுக்குப் பதிலளிக்கப் பயந்தே பேச்சுவார்த்தை மேசைக்கு வராமல் மகிந்த தரப்பினர் பின்வாங்கினர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமது ஆட்சியின்போது தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் முயற்சி தோல்வி கண்டதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பே பிரதான காரணம் என்று முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ஷ  குற்றம்சுமத்தியிருந்தார்.

இக்குற்றச்சாட்டுக்கு பதில் வழங்கிய, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், "மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுடன் அனைத்துச் சுற்றுப் பேச்சுகளிலும் நாங்கள் உண்மை முகத்துடன் பங்காற்றினோம். எங்களின் தீர்வுத்திட்ட யோசனைகளுக்குப் பதிலளிக்கப் பயந்தே பேச்சுவார்த்தைக்கு வராமல் மகிந்த தரப்பினர் பின்வாங்கினர். பேச்சுக்களை நாங்கள் குழப்பியடிக்கவில்லை.போலி முகத்தைக் காட்டி மகிந்த தரப்பினரே குழப்பியடித்தனர். இது நாட்டு மக்களுக்கும் பன்னாட்டுச் சமூகத்துக்கும் தெரிந்த விடயம். ஆனால், இப்போது மகிந்த புதுக்கதை சொல்கின்றார்” என்றார்.
 

Leave Comments

Comments (0)