சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் எதற்காக அமைக்கப்படுகிறது?- நீதிபதிகள் கேள்வி

/files/detail1.png

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் எதற்காக அமைக்கப்படுகிறது?- நீதிபதிகள் கேள்வி

  • 0
  • 0

 

சேலம் - சென்னை இடையே எட்டு வழிச்சாலை திட்டம் எதற்காக அமைக்கப்படுகிறது? என்று  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இந்தத் திட்டத்திற்காகக் காஞ்சிபுரத்தில் 59.1 கிமீ, திருவண்ணாமலையில் 123.9 கிமீ, கிருஷ்ணகிரியில் 2 கிமீ, தருமபுரியில் 56 கிமீ, சேலத்தில் 36.3 கிமீ என இந்த ஐந்து மாவட்டங்கள் வழியாக 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளன. இந்தச் சாலை அமைப்பதனால் விவசாய நிலங்கள், மரங்கள், மலைகள், காடுகள், வனப்பகுதிகள் போன்றவைகள் அழிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. இதனால் இந்த திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருவதோடு, இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கும் தொடர்ந்தனர்.

இந்த வழக்கினை நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்பராயன் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்திவந்தது. இத்திட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையும் முடிவடைந்த நிலையில், கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி, " 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்து" உத்தரவிட்டனர் நீதிபதிகள். 

இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 22) விசாரணைக்கு வந்தது.

வழக்கினை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ”சேலம் - சென்னை இடையே எட்டு வழிச்சாலை திட்டம் எதற்காக அமைக்கப்படுகிறது? இது மிக அவசியமான திட்டம் என்று சொல்கிறீர்கள். ஆனால் சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தாமதம் ஆகிறது என்கிறீர்கள். எனவே, இந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகள் என்னென்ன?” என்று கேள்வி எழுப்பினர். 

Leave Comments

Comments (0)