ஜெய ஸ்ரீ ராம்"" என்று சொல்லச்சொல்லி இஸ்லாமியச் சிறுவனைத் தாக்கிய காவி கும்பல்"

/files/detail1.png

ஜெய ஸ்ரீ ராம்"" என்று சொல்லச்சொல்லி இஸ்லாமியச் சிறுவனைத் தாக்கிய காவி கும்பல்"

  • 0
  • 0

 

உத்தரப் பிரதேச மாநிலத்தில்quot;ஜெய் ஸ்ரீ ராம்" என்று சொல்ல மறுத்த 16 வயது இஸ்லாமியச் சிறுவனைக் கொடூரமான முறையில் தாக்கியிருக்கிறது காவி கும்பல்.

"ஜெய் ஸ்ரீ ராம்" என்று சொல்ல மறுத்த இஸ்லாமிய மக்களைத் தாக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. 

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரை அருகே உள்ள பாரா பகுதியைச் சேர்ந்தவர் முகமது தாஜ். 16 வயதான இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று கித்வாய் நகரிலுள்ள மசூதிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் வந்த காவி குண்டர்கள்`தலையில் எதற்காகத் தொப்பி அணிந்திருக்கிறாய். இந்த பகுதி தலையில் தொப்பி அணியத் தடைசெய்யப்பட்ட பகுதி` என்று கூறி  "ஜெய் ஸ்ரீ ராம்" என்று சொல்ல வற்புறுத்தியுள்ளனர். சிறுவன் சொல்ல மறுத்ததால்  அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர் காவிக் குண்டர்கள். 

இதில் கடுமையான காயமடைந்த முகமது தாஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரியாத காவி குண்டர்கள் மீது இருசமூகங்களுக்கிடையே பகைமையை உருவாக்குதல் பிரிவு (153ஏ)-வின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

Leave Comments

Comments (0)