போர்க்குற்றவாளிக்கு உயர் பதவியா?

/files/detail1.png

போர்க்குற்றவாளிக்கு உயர் பதவியா?

  • 0
  • 0


இலங்கை அரச படையின் தலைமை அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான போர்க்குற்ற ஆவணங்களை உள்ளடக்கிய ஆவணம் ஒன்றை தென்னாபிரிக்காவைத் தளமாகக்கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கானஅமைப்பு வெளியிட்டுள்ளது.

137 பக்கங்களைக்கொண்ட இந்த ஆவணத்தில் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் அவற்றுக்கான ஆதாரங்கள் தொகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் போர்க் குற்றங்கள் தொடர்பான படங்கள், குறுஞ்யெ்திகள், சாட்சியங்களின் வாக்குமூலங்கள் ஆகியன இதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

போர்க் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள ஒருவரை படையினரின் பிரதானியாக நியமிப்பது என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் இலங்கையை மிகவும் கீழ்நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது என்றும் சர்வதே உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை படையின் பிரதானியாக மேஜர் ஜென்ரல் சவேந்திர சில்வாவை நியமித்துள்ளார். இந்நிலையில் இவரின் நியமனம் தொடர்பில் சர்வதே உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் மக்கள் மீது 2009ம் ஆண்டு நடத்தப்பட்ட இறுதிப்போரில் மருத்துவமனைகள், உணவினை பெறுவதற்காக வரிசையில் நின்றவர்கள் மற்றும் முகாம்கள் மீது வேண்டுமென்றே தாக்குதலை மேற்கொண்டு ஒருசில மாதங்களில் பலஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமான 58வது படைப்பிரிவின் கட்டளை தளபதி என்ற அடிப்படையில் சவேந்திர சில்வா விசாரணையை எதிர்கொள்ளவேண்டியவர் என ஐக்கியநாடுகள் விசாரணை குழுதெரிவித்திருந்தது என சர்வதே உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் சுட்டிக்காட்டிள்ளார்.

சவேந்திர சில்வா தலைமையிலான படைப்பிரிவு பெண்கள்,குழந்தைகள் உட்பட பலர்சுட்டுக்கொல்லப்படுவதற்கும் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல்போவதற்கும்பாலியல் சித்திரவதைகளிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கும் காரணம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave Comments

Comments (0)