காஷ்மீர் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்- ஐ.நா. மனித உரிமை ஆணையம்

/files/detail1.png

காஷ்மீர் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்- ஐ.நா. மனித உரிமை ஆணையம்

  • 0
  • 0

காஷ்மீர் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில், காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவித்துள்ளதோடு, காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு உரிமைகளை வழங்கக்கூடிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவையும் ரத்து செய்துள்ளது. இந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப் பல நாட்களாகத் திட்டம் தீட்டிய பாசிச பாஜக, காஷ்மீரில்  முழு ஊரடங்கு உத்தரவைப் பிறபித்து, இண்டெர்னெட் உட்பட அனைத்து தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு, முன்னாள் முதல்வர்கள் வீட்டுக் காவலில் வைத்து இந்த சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. பாஜகவின் இந்த நடவடிக்கை 'காஷ்மீர் மக்களின் மாநில உரிமையை அபகரிப்பது` என்று பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து, "காஷ்மீரில் இந்திய அரசு சமீபத்தில் எடுத்த நடவடிக்கைகள் மிகுந்த கவலை அளிக்கிறது. இணைய தள சேவை உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்புகள் முடக்கப்பட்டு, அரசியல் தலைவர்கள் கைது செய்து நீண்ட நாள் வீட்டுக்காவலில் வைத்திருந்த  நடவடிக்கைகள் சரியானவை அல்ல. 

அங்குள்ள கட்டுப்பாடுகளுக்கு இந்திய அரசு முடிவு கட்ட வேண்டும். மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். காஷ்மீர் மக்களிடம் ஆலோசித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்பட வேண்டும்” என்று ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

Leave Comments

Comments (0)