இது இனவாதிக்கு எதிரான போராட்டம்

/files/detail1.png

இது இனவாதிக்கு எதிரான போராட்டம்

  • 0
  • 0

 

இலங்கை கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்களின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால்  முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் தாயகமான வடக்கும் மற்றும் கிழக்கு மாகாணங்களில்  இலங்கை அரசாங்கம் பொறுத்தமற்றவகையில் இதுவரையில் சிங்கள ஆளுநர்களையே பதவிகளில் அமர்த்தி வந்தது. இது இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும், மக்களின் பிரச்சனைகளை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது, தமிழ் மக்களை அச்சத்துடன் வைத்திருப்பதற்கே இவ்வாறான தெரிவுகள் எனக்கூறி தமிழ்   எதிர்த்து வந்தனர்.

இந்நிலையில் வடக்கில் தற்போது தமிழ் ஒருவர் ஆளுநராக நியமனம் பெற்றுள்ளார். அவரும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் விடையத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை உடையவரென விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதே போல்  ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, தமிழ் மக்கள் விடயத்தில் ஒரு இனவாதியாக செயற்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரின் நியமனத்தை அங்குள்ள தமிழ் மக்கள் ஏற்க மறுக்கின்றனர்.

இந்நிலையில், மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்களின் நியமனம், கிழக்கு மாகாண தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தையும் பதற்றத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நியமனத்தினை கிழக்குமாகாண தமிழ் மக்கள் ஏற்கவில்லை என்பதை ஜனாதிபதிக்கும் நாட்டுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 25.01.2019 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் அமைதிவழி போராட்டம் நடைபெறவுள்ளது.

மக்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்காக 25ம் திகதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வராது   போராட்டத்தில் ஈடுபடவேண்டும்.  

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்களை முஸ்லீம் என்ற காரணத்திற்காக நாங்கள் எதிர்க்கவில்லை அவர் தமிழ் மக்கள் விடயத்தில் ஒரு இனவாதியாக செயற்பட்டுள்ளார். எமது போராட்டம் முஸ்லீம் மக்களுக்கு எதிரானதல்ல அவர்மீது பின்வரும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

தமக்கு வழங்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் பதவியை பயன்படுத்தி வாழைச்சேனையில் இருந்த காளிகோயில் காணியை பள்ளிவாசல் மற்றும் சந்தையாக கட்டிவித்தேன் என பேசியதையும் அதனை நடைமுறைப்படுத்தியுள்ளமைக்கும் மற்றும் தனக்கு சார்பாக நீதிமன்ற தீர்பை மாற்ற நீதிபதியை மாற்றினேன் என பேசியமை வட கிழக்கு இணைக்கப்படால் இரத்த ஆறு ஓடும் என பாராளுமன்றில் பேசியமை என பல குற்றச்சாட்டுக்களை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மீது முன்வைக்கப்பட்டுள்ளது.

Leave Comments

Comments (0)