அரசின் அடியாட்களா ? வருமானவரித்துறை !
March 6, 2021 - selvamani T
March 7, 2021,5:32:33 AM
நாட்டு மக்கள் சுர்ஜித்தின் உயிரிழப்பை எண்ணிக் கதறிக் கொண்டிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் எங்குப் பார்த்தாலும் `மனித்துவிடு சுர்ஜித்` என்ற வாசகம். சுர்ஜித்தை மீட்க வேண்டும் என்று கடந்த வெள்ளிகிழமையிலிருந்து இன்று அதிகாலை வரை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரார்த்தனை. ஆனால் என்ன நடந்திருக்கிறது. சுர்ஜித்தை காப்பாற்றுவதற்கான கருவி இங்கு இல்லை என்பது தொழில்நுட்ப பிரச்னை இல்லை. மனித உயிர்கள் இங்கு எவ்வாறு மதிக்கப்படுகிறது என்பதன் வெளிபாடு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த சுர்ஜித் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) மாலை 650 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தார். ஐந்து நாட்களாக 650 அடி அழமுள்ள கிணற்றில் 80வது அடியில் தண்ணீர்கூட இல்லாமல் பயத்தில் கதறிகொண்டே அந்த குழந்தை இருந்திருக்கிறது என்றால் எவ்வளவு பெரிய பதபதைப்பை ஏற்படுத்துகிறது. இவரை மீட்கும் பணியில் கடந்த ஐந்து நாட்களாக தீயணைப்புத்துறையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் எனப் பலர் ஈடுபட்டுவந்தும் சுர்ஜித்தின் உடலை இன்று அதிகாலையில் இறந்த நிலையில்தான் மீட்க முடிந்தது. பல பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் மண் சரிவு ஏற்பட்டதால் இத்தகைய இக்கட்டான நிலை ஏற்பட்டது. இதைதொடர்ந்து மீட்கப்பட்ட சுர்ஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சுர்ஜித்தின் உடல் கல்லறைத்தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
ஒரு பிரச்னை நிகழ்வதற்கு முன் காப்பது அரசின் வேலை. அந்த வேலையைச் செய்ய அரசு தவறிவிட்டது. சுஜித்தின் உயிரை ஒரு சம்பவமாக மட்டும் பாராமல் இதனை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு அரசு தொழிநுட்ப வசதிகளை ஏற்படுத்தி தயார் நிலையில் வைத்தும், பல கிராமங்களில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டு மூடாமலே இருக்கும் குழாய்களை மூடுவதன் அவசியம் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று கோரிக்கை எழுந்தவண்ணம் உள்ளது.
மலக்குழி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படும் துப்புரவுத் தொழிலாளிகள் விசவாயு தாக்கிக் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையிலும், அதற்கு ஒரு தொழில்நுட்ப கருவியைக் கண்டுபிடிக்காமல் காது கேட்காமல் செயல்படும் இந்த அரசு சுர்ஜித்தின் உயிரிழப்பையும் அப்படிக் கடந்து செல்லாமல் மக்களின் கோரிக்கையை ஏற்றுச் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ஆழ்ந்த இரங்கல் சுர்ஜித்.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Leave Comments