இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்க எதிர்ப்பு

/files/detail1.png

இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்க எதிர்ப்பு

  • 0
  • 0

ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசிற்கு மேலும் கால அவகாசம் வழங்கக்கூடாதென  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஐநாவிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இலங்கையில்  போர் நடைபெற்ற காலங்களில் பெரியவர்கள் இளையவர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இதில் இறுதிப் போர் நடைபெற்ற 2009ம் ஆண்டு  படையினரின் வேண்டுகோளிற்கிணங்க  குடும்பத்தினரால் அரச படைத்தரப்பிடம் ஒப்படைக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த  பத்து வருடங்களாக காணாமல் போன தமது உறவினர்களை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி இலங்கை அரசிடமும் சர்வதேச சமூகத்திடமும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றபோதும் இதுவரையில் அந்தக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில்,  தமது உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டதற்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்கள் அமைத்திருக்கும் விசாரணை ஆணைக்குழுக்கள் மூலம் தமக்கு நீதி கிடைக்காதென காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஐநாவிடம் சுட்டிக்காட்டியுள்ளதோடு இலங்கைக்கு ஐநா தீர்மானம் நிறைவேற்றல் குறித்து மேலும் கால அவகாசம் வழங்க கூடாதென வலியுறுத்தியுள்ளனர்.

 

Leave Comments

Comments (0)