கொத்தடிமைகளாக இருந்த 42 பேர் மீட்பு

/files/detail1.png

கொத்தடிமைகளாக இருந்த 42 பேர் மீட்பு

  • 0
  • 0

 

காஞ்சிபுரம் அருகே, கடந்த ஐந்து வருடங்களாகக் கொத்தடிமைகளாக இருந்த 60 வயது முதியவர் உட்பட 42 பேரை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், கோனேரிக்குப்பத்தி பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரிடம் சில ஆயிரம் ரூபாய்க் கடன் வாங்கியதற்காக, 42 பேரைக் கடந்த ஐந்து வருடங்களாகக் கொத்தடிமைகளாக வைத்திருக்கிறார். இதில் குழந்தைகளும் உண்டு. அவர்களுக்குச் சரியான, உணவு, உடை போன்ற எந்த அடிப்படை வசதிகளும் வழங்காமல், அவர்களைக் கொத்தடிமைகளாக வைத்துவந்துள்ளார். அவர்களுக்குத் தங்குவதற்கு வீடுகள் கூட இல்லை. காட்டில்தான் குடியிருக்கிறார்கள். அவர்களின் குழந்தைகளுக்குச் சரியான உணவுகளும் வழங்கப்படுவதில்லை, அதற்குப் பதிலாக வெறும் தண்ணீரை மட்டும் கொடுக்கிறார்கள். சிறிதும் ஓய்வில்லாமல் மரங்களை வெட்டச்சொல்லித் துன்புறுத்திவந்துள்ளார்.

இந்த தகவலறிந்த காஞ்சிபுரம் மாவட்ட துணை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று கொத்தடிமைகளாக இருந்த 42 பேரை மீட்டுள்ளனர். மீட்டதாகப்பட்டவர்களில் 18 பேர் குழந்தைகள்.

Leave Comments

Comments (0)