இலங்கையில் தொடரும் ஊடக அடக்குமுறை

/files/detail1.png

இலங்கையில் தொடரும் ஊடக அடக்குமுறை

  • 0
  • 0

இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள முள்ளியவளை கணுக்கேணிப்பகுதியில் பொது கிணறு ஒன்றில் இருந்து படையினர் தொடர்ச்சியாக நாள்தோறும் இருபதிற்கு மேற்பட்ட தண்ணீர்  தாங்கி வாகனங்களில்  நீரினை எடுத்து செல்வதால் கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் வாழும்  பொதுமக்கள்,   படையினரை நீர் எடுக்கவேண்டாம் என்று தெரிவித்ததையடுத்து படையினருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பத்தில் செய்தி சேகரிப்பிற்காக சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியதோடு  சுயாதீன ஊடகவியலாளரான செல்வராசா சுமந்தன் என்பவரது கமெராவை படை அதிகாரி ஒருவர் பறிக்க முற்பட்டுள்ளார்.

மேலும் மக்கள் தமக்கு எதுவும் முறையிடவில்லை என்று தெரிவித்த படை அதிகாரி, ஊடகவியலாளர்கள்தான் பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர் என குற்றம்சுமத்தியுள்ளார். ஊடகவியலாளர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் குறித்தும் படையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

இருந்தும் படையினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஊடகவியலாளர்களால் குறித்த சம்பவம் வெளிக்கொணரப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave Comments

Comments (0)