விழுப்புரம் அருகே தலித் பெண் ஆதிக்க சாதியினரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவ ஆய்வு அறிக்கை

/files/detail1.png

விழுப்புரம் அருகே தலித் பெண் ஆதிக்க சாதியினரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவ ஆய்வு அறிக்கை

  • 1
  • 0

 

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட விநாயகர்புரம் மாரியம்மன்கோவில் தெருவில் வசிக்கிற தலித் ராஜேந்திரன், கோமளா தம்பதியரின் இளைய மகள் மீனா வயது 18 என்பவர் அருகில் உள்ள குட் நைட் மருந்து கம்பெனியில் காண்டிராக்டில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 19ஆம் தேதி பிற்பகல் 2.00 மணிக்கு வேலைக்குச் சென்றவர் இரவு 9.45மணிக்கு வெளியே வந்துள்ளார். மீனாவை அவருக்கு ஏற்கனவே பழக்கமான தலித் அல்லாத அருள்ஜோதி வயது 21 என்பவர் பைக்கில் அழைத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றதும் கொஞ்சம் பேசிட்டு போவோம் என்று நிறுத்தியுள்ளான். அங்கே இருட்டிலிருந்து சுமார் 25 வயதிற்குட்பட்ட மூன்று வாலிபர்கள் வந்து இங்கே என்னடா பேசிக்கொண்டு இருக்கிற உங்க அப்பா அம்மாவுக்கு போன் செய்யனும் அவர்கள் வந்த பிறகுதான் விடுவோம் என்று கண்டிப்பதைப் போல் பேசி மிரட்டியுள்ளனர். 

அப்போது அங்கே சுமார் 30 வயது மதிக்கத்தக்க மற்றொருவன் வந்துள்ளான். நான்குபேரில் இருவர் அருள்ஜோதியை பிடித்துக்கொள்ள மற்ற இருவரும் மீனாவை பலவந்தமாக ரயில் தண்டவாளத்தை தாண்டி இருட்டு பகுதிக்குள் இழுத்துச் சென்று பலவந்தமாக வன்புணர்ச்சி செய்துள்ளனர். மீனா தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியபோது மீனாவை தரையில் போட்டு அங்கும் இங்குமாக இழுத்துச்  சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசி அவளது முகத்தில் மாறி மாறி அடித்து காயப்படுத்தியுள்ளனர். இதனால் உடலில் சக்தியின்றி சத்தம்போடகூட முடியாமல் மயங்கி கிடந்துள்ளார் மீனா. இக்கொடிய சம்பவம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிகலும் போது மீனாவின் அக்கா சுபாஷினி தங்கை மீனா வீட்டிற்கு வராததால் அவளது காண்டிராக்டர் சரவணன் என்பவருக்கு போன் செய்து என் தங்கை ஏன் இன்னும் வரவில்லை என்று போன்செய்து விசாரித்துள்ளார். சரவணன் சந்தேகத்தின்பேரில் அருள்ஜோதியின் அண்ணனுக்கு போன் செய்து அவனைப் பிடித்து உன் தம்பி அருள்மொழியை எங்கே அடையாளம் காட்டு என்று நிர்ப்பந்திக்க அருள்மொழிக்கு ரிங் மட்டுமே போய்யிருக்கிறது அவன் போனை நீண்ட நேரமாக எடுக்கவில்லை.

சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் தனது அண்ணன் ஏதோ மாட்டிக்கொண்டான் விஷயம் தெரிந்துவிட்டது என்று கருதி போனை எடுத்தவன் அண்ணன் என்னைச் சிலர் அடித்துவிட்டார்கள் இந்த இடத்தில் நிற்கிறேன் என்று கூறியிருக்கிறான். சம்பவ இடத்திற்கு சென்ற சரணவனன் மற்றும் உறவுக்கார இளைஞர்கள் அருள்மொழியை பிடித்த போது மீனாவை அருள்மொழி அழைத்து வந்து இருக்கிறான். மீனாவை உறவினர்கள் நடு இரவே விநாயகர்புரம் மனகுளா மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்குச் சேர்த்தனர் தகவல் அறிந்த வந்த கண்டமங்கலம், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலிசார் மருத்துவச் சிகிச்சையிலிருந்த மீனாவை உன்னை 3 பேர் கெடுத்தான் 4 பேர் கெடுத்தான் என்று சொல்லாதே, அவர்கள் அப்படி செய்திருந்தால் உயிரோடு இருக்க மாட்டாய் என்று இழிவாகப் பேசி  அவர்களாகவே எழுதிய காகிதத்தில் கையொப்பம் பெற்றுச் சென்றுள்ளனர்.  அருள்ஜோதி மீது மட்டும் வழக்கு பதிவு செய்து அவரை காவலில் வைத்து உள்ளனர். 20ஆம் தேதி இரவே குனமளா மருத்துவமனை நிர்வாகம் மீனாவிற்குச் சிகிச்சை அளிக்காமல் கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி விட்டனர். இதனால் மீனா பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மீண்டும் உள்நோயாளியாக சேர்ந்து உடற்பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை பெற்றார். மனநல மருத்துவர்கள் மீனாவை ஆற்றுப்படுத்தி வருகிறார்கள். 

1. விநாயகர் புரம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கிற பட்டியல் சாதிப்பெண் மீனாவை 19ஆம் தேதி இரவு 10.00மணிக்குப் பின்னர் சட்ட விரோதமாகச் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசி தாக்கி தீண்டாமை வன்கொடுமைகளைச் செய்து, கூட்டுபாலியல் வன்கொடுமை செய்த பட்டியல் சாதி அல்லாத எதிரிகள் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும். 

2. மீனாவை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த அனைவரையும் உடனடியாக கைது செய்து சிறைப்படுத்திட வேண்டும்.

3. பாதிக்கப்பட்ட மீனாவிற்கு தொடர்ந்து ஜிப்மர் மருத்துவமனை சிகிச்சை மற்றும் ஆற்றுப்படுத்துல் செய்ய வேண்டும். 

4. பாதிக்கப்பட்ட மீனாவிற்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தகுந்த இழப்பீடும் அரசு வேலை வாய்ப்பும் அளித்து பாதுகாத்திட வேண்டும். 

5. பாதிக்கப்பட்ட பெண் மீனாவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரில் சந்தித்து ஆற்றுபடுத்தி தைரியப்படுத்திட வேண்டும். மீனாவின் குடும்பத்திற்கு சட்டப்பூர்வமாக போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். 

கள ஆய்வு குழு:
“சசி” மனித உரிமைக்கான நிறுவனம்- திண்டிவனம். 
 

Leave Comments

Comments (0)