விழுப்புரத்தில் செயல்பட்டு வந்த வருமானவரி அலுவலகத்தை மூடக்கூடாது- ரவிக்குமார்

/files/detail1.png

விழுப்புரத்தில் செயல்பட்டு வந்த வருமானவரி அலுவலகத்தை மூடக்கூடாது- ரவிக்குமார்

  • 0
  • 0

 

விழுப்புரத்தில் செயல்பட்டு வந்த வருமானவரி அலுவலகத்தை மூடக்கூடாது என்று ரவிக்குமார் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.

”விழுப்புரத்தில் செயல்பட்டுவந்த வருமானவரி அலுவலகத்தை மூடி அதைக் கடலூர் அலுவலகத்தோடு இணைத்து மத்திய
அரசு அக்டோபர் 1ஆம் தேதி ஆணை பிறப்பித்துள்ளது. விழுப்புரம் பகுதி மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையின் காரணமாக 1977ஆம் ஆண்டு இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டது. இது கள்ளக்குறிச்சி, ஆரணி, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த அலுவலகத்தைத்தான் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த அலுவலகத்தை மூடுவதாகவும் கடலூர் அலுவலகத்தோடு இதை இணைப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தப் பகுதி மக்கள் தமது வருமான வரி தொடர்பான நடைமுறைகளுக்காக 200 கிலோ மீட்டர் அளவுக்குப் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகி உள்ளனர்.

alt text

விழுப்புரம் பகுதியில் தொடர்ந்து இந்த அலுவலகம் செயல்பட வேண்டுமென இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களது கோரிக்கையைக் கருத்தில் கொண்டு விழுப்புரம் அலுவலகத்தைக் கடலூரோடு இணைக்கும் முடிவைத் திரும்பப் பெற்று இந்த அலுவலகம் தொடர்ந்து செயல்பட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று மத்திய நிதி அமைச்சருக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

Leave Comments

Comments (0)