அஞ்சல் துறையில் தமிழர்களுக்கு அநீதி - ரவிக்குமார்

/files/detail1.png

அஞ்சல் துறையில் தமிழர்களுக்கு அநீதி - ரவிக்குமார்

  • 0
  • 0

 

அஞ்சல் துறையில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும்தான் தேர்வெழுதவேண்டும் என்பது தமிழ்நாட்டைச் சேராத வட இந்திய மாநிலத்தவரை இங்கே பணி அமர்த்துவதற்கான சதித்திட்டம் என்று விசிக எம்.பி. ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"அஞ்சல் துறையில் போஸ்ட்மேன் உள்ளிட்ட பதவிகளுக்கு 1000 பணியிடங்களுக்கான தேர்வு நாளை (ஜூலை 12)  நடைபெறவுள்ளது. இதுவரை தமிழில் தேர்வு எழுதும் வசதி இருந்தது. கடந்த மே மாதம் 16ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில்கூட, பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதலாம் என்றுதான் கூறப்பட்டிருந்தது. திடீரென்று இப்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதலாம் என மாற்றியுள்ளனர். ஜூலை மாதம் 11ஆம் தேதிதான் இந்தப் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது மாபெரும் அநீதி மட்டுமல்ல மோசடியுமாகும்.

2016-17 ஆம் ஆண்டு தேர்வு நடைபெற்றபோது பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைவிடத் தமிழில் கூடுதலாக மதிப்பெண் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. தற்போது அந்த மோசடி குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இப்போதும் தமிழ்நாட்டைச் சேராத வட இந்திய மாநிலத்தவரை இங்கே பணி அமர்த்துவதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பது தெரிகிறது. இந்த அநீதியை அனைவரும் இணைந்து தடுக்கவேண்டும்" என்று ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave Comments

Comments (0)