கிளிநொச்சியில் மாபெரும் பேரணி

/files/detail1.png

கிளிநொச்சியில் மாபெரும் பேரணி

  • 0
  • 0

40வது ஐநா மனித உரிமைப்பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள பெப்ரவரி 25ம் நாள் கிளிநொச்சியில் மாபெரும் பேரணி ஒன்று நடாத்தப்படவுள்ளது.

இந்தப் பேரணியை நடத்த வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையில்   காணாமால் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தர வலியுறுத்தி அறவழிப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகியுள்ளது. ஆனால் இலங்கை அரசு இந்த போராட்டத்திற்கான நீதியை இன்னும் வழங்கவில்லை.

இந்நிலையில் இலங்கை ஐநாவில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற மேலும் கால அவகாசம் இலங்கைக்கு வழங்கக்கூடாது என வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு  என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பு மாபெரும் பேரணி ஒன்றை வரும் 25ம் திகதி நடாத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave Comments

Comments (0)