வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது தந்தை மதுரை மத்தியச் சிறையில் அடைப்பு

/files/detail1.png

வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது தந்தை மதுரை மத்தியச் சிறையில் அடைப்பு

  • 0
  • 0

 

வழக்கறிஞர் நந்தினிக்கு ஜூலை 5ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ள நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நந்தினியையும், அவரது தந்தை ஆனந்தனையும் ஜூலை 9ஆம் தேதி வரையில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்கு நேற்று (ஜுன் 27) திருப்பத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குறுக்கு விசாரணையின்போது டாஸ்மாக்கில் விற்பனை செய்வது போதைப் பொருளா? உணவுப் பொருளா? இல்லை மருந்து பொருளா?, IPC 28ன் படி டாஸ்மாக் மூலம் போதைப் பொருள் விற்பது குற்றமில்லையா? என சட்டப்படி வாதாடியதற்காக ஒரு வாரத்தில் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கத்தில் ஆனந்தன் மற்றும் நந்தினி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போட்டு, ஜூலை 9ஆம் தேதி வரையில் மதுரை மத்தியச் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அரசின் சாராயக்கடை கொள்கைக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் நந்தினிக்கு, அரசை எதிர்த்துப் போராடினால் என்னவெல்லாம் செய்வோம் என்ற மிரட்டலின் உச்சக்கட்டம் இது என்று பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

Leave Comments

Comments (0)