பரந்தாமனுக்கு நீதி கேட்டு போராடியவர்கள் மீது காவல்துறை தாக்குதல்

பரந்தாமனுக்கு நீதி கேட்டு போராடியவர்கள் மீது காவல்துறை தாக்குதல்

  • 2
  • 0


இறையூரைச் சேர்ந்த பரந்தாமன் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய அவரது உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தி கைது செய்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இருக்கும் இறையூரைச் சேர்ந்தவர் பரந்தாமன். இவர் கல்லூரியில் படிக்கும்போது மதுரை மாவட்டம் பாரப்பட்டியை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூக பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பெண்ணின் குடும்பத்தினர் பரந்தாமனுக்கு பல்வேறு இடையூறுகளை வழங்கி வந்த நிலையில் புனேவில் இருந்த பரந்தாமன் இரண்டு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.

தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டாலும் அதனை ஏற்க மறுக்கும் அவரது உறவினர்கள் பரந்தாமன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் எனக் கூறி அவருக்கு நீதி கேட்டு போராடி வருகின்றனர்.

ஆதிக்க சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட தலித் இளைஞர் மரணத்திருப்பது 2019-ஆம் ஆண்டின் முதல் சாதிய துயர சம்பவமாக அனைவரையும் வருந்த செய்திருக்கிறது.

இந்நிலையில், திட்டக்குடி அருகே பரந்தாமனுக்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், முதியவர்களையும் தாக்கிய காவல்துறை அனைவரையும் கைது செய்திருக்கிறது.

alt text

Leave Comments

Comments (0)