யாழ்ப்பானத்தில் மீண்டும் குடும்ப விபரங்களைத் திரட்டும் காவல்துறை

/files/detail1.png

யாழ்ப்பானத்தில் மீண்டும் குடும்ப விபரங்களைத் திரட்டும் காவல்துறை

  • 0
  • 0

யாழ்ப்பானம், கோப்பாய், அச்சுவேலி ஆகிய பகுதிகளில் மீண்டும்  இலங்கை காவல்துறையினர் மக்களின் விபரங்கள் தொடர்பில் பதிவு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

போர் காலங்களில்  இலங்கை அரசின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இருந்த தமிழர்களின் பிரதேசங்களில் தினம் இந்த  பதிவு நடவடிக்கை என்ற பெயரில் குடும்பங்களின் விபரங்கள் திரட்டப்பட்டு வந்தது.  இதேபோல் போர் முடிவுற்ற பின்னரும் சில ஆண்டுகள் இந்த நடவடிக்கைத் தொடர்ந்தது.

தற்போது   இந்த பதிவு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சாதாரன உடையில் இருந்த  காவல்துறையினரின் இந்த செயற்பாடு தமிழ் மக்கள் மத்தியில் போர்கால அச்சத்தை மீண்டும்  தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ் மாவட்டத்திற்கு பயணம் செய்ய இருப்பதாகவும் அவரின் பாதுகாப்புக்கருதியே இந்த பதிவு நடவடிக்கையில் காவல்துறை இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி கொலைச்சதி வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், அவரது பாதுகாப்புக்காரணங்களுக்காக அவர் செல்லும் இடமெங்கும் உள்ள குடியிருப்பாளர்கள், நிறுவனங்களின் விபரங்களைச் சேகரிக்குமாறு காவல்துறையினருக்கு கட்டளையிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி, வரும் 6ம் திகதி யாழ்ப்பானத்துக்கு வருகை தர உள்ளதாகவும் அவர்  கோப்பாய், அச்சுவேலிப்பகுதிகளில்  சில நிகழ்வுகளில் பங்குகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இந்தப்பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு குடும்ப விபரங்களை திரட்டி வருகின்றனர். எனவே இந்த செயற்பாடு ஜனாதிபதி வருகையை முன்நிறுத்தி மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Leave Comments

Comments (0)