செய்தியாளர் முத்துவேலைத் தாக்கிய காவல் ஆய்வாளர் கஜேந்திரனைக் கைது செய்யவேண்டும்

/files/detail1.png

செய்தியாளர் முத்துவேலைத் தாக்கிய காவல் ஆய்வாளர் கஜேந்திரனைக் கைது செய்யவேண்டும்

  • 0
  • 0

 

தூத்துக்குடி தட்டார்மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் குறித்து செய்தி வெளியிட்டதற்காக வெளிச்சம் தொலைக்காட்சியின் செய்தியாளர் தோழர் முத்துவேலை, கஜேந்திரன் கூலிப் படையை ஏவி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். 

தூத்துக்குடி தட்டார்மடம் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளர் பணியில் இருப்பர் கஜேந்திரன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த வேறொருவர் மனைவியுடன் தொலைப்பேசியில் ஆபாசமாகப் பேசி தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அப்பெண்ணின் கணவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து முத்துவேல் செய்தி வெளியிட்டிருக்கிறார். இதனால் கோபமடைந்த கஜேந்திரன் முத்துவேலைத் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவெடுத்து, கூலிப்படையை ஏவி பயங்கரமான ஆயுதங்களைக் கொண்டு கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

alt text

இதில் படுகாயமடைந்த முத்துவேல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பத்திரிக்கையாளர் முத்துவேல் மீது தாக்குதல் நடத்திய கஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பத்திரிக்கையாளர்கள் மன்றம் சார்பில் காவல்துறையில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

Leave Comments

Comments (0)