மோடி- ஜி ஜின்பிங் வருகைக்காக திபெத்திய மாணவர்களைக் கைது செய்த காவல்துறை

/files/detail1.png

மோடி- ஜி ஜின்பிங் வருகைக்காக திபெத்திய மாணவர்களைக் கைது செய்த காவல்துறை

  • 0
  • 0

மோடி- ஜி ஜின்பிங் வருகையையொட்டி திபெத்திய மாணவர்களைக் கைது செய்துள்ளனர் தமிழக காவல்துறையினர். இதனைக் கண்டித்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் நாளை மற்றும் நாளை மறுதினம் மாமல்லபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த பல்லவர் கால சிற்பங்களை சுற்றி பார்க்கவுள்ளனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. 

இதனால் ஈஞ்சம்பாக்கம் முதல் புதுப்பட்டினம் வரையிலான கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை, 12ஆம் தேதி வரை மாமல்லபுரத்திற்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை, போன்ற பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. 

இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் மோடி வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் திபெத்திய மாணவர்களைக் கைதுசெய்துள்ளது தமிழகக் காவல்துறை. இதனைக் கண்டித்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எவ்வித போராட்ட அறிவிப்பும் செய்யாத நிலையில்  திபெத்திய மாணவர்களைக் கைது செய்துள்ளனர். இரவு 12 மணிவரை திபெத்தியப் பெண் மாணவர்கள் உட்படத் தாம்பரம் காவல் நிலையத்தில் சட்டவிரோதமாகக் கைது செய்து அச்சுறுத்தியிருக்கின்றது காவல்துறை.

மேலும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்று வரும் திபெத் மாணவர் ஒருவர் மற்றும் MCC கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ஆகியோரை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

பல மாணவர்களிடம் எவ்வித போராட்டங்களிலும் கலந்து கொள்ளக்கூடாது என்று எழுதி வாங்கியுள்ளனர். மேலும் மாணவர்கள் தங்கியுள்ள இடங்களுக்கே சென்று அவர்களது வீட்டு உரிமையாளர்களிடமும்  தீவிரவாதிகள் போலச் சித்தரித்து மிரட்டியிருக்கின்றனர். சில மாணவர்களைத் தினமும் அருகில் உள்ள காவல்நிலையத்தில் கையெழுத்திடச் சொல்லித் துன்புறுத்தியுள்ளனர். இதனை எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

Leave Comments

Comments (0)