போர் முடிந்த பின்பும் முகாம்களில் துன்புறும் மக்கள்

/files/detail1.png

போர் முடிந்த பின்பும் முகாம்களில் துன்புறும் மக்கள்

  • 0
  • 0

இலங்கையின் வடக்கில் 16 அகதிகள் முகாம்கள் இன்னும் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும்  இடையில் நடந்த போர் முடிவிற்கு வந்து 10 வருடங்கள் நிறைவடைகின்ற  நிலையிலும்  இன்றும் மக்கள் மீள் குடியேற்றப்படாமல் இடைத்தங்கள் அகதிகள் முகாம்களில் வாழ்ந்து வரும் நிலை காணப்படுகின்றது.

வடக்கின் யாழ் மாவட்டத்தில் மட்டும் 16 அகதிகள் முகாம்கள் இருப்பதாக வடக்கு கிழக்கு மீனவ ஒத்துழைப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்  அன்டன் ஜேசுதாசன் தெரிவித்துள்ளார்.

இந்த முகாம்கள் சிலவற்றில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருப்பதாகவும் அவர்கள் இரு கழிப்பறைகளையே பயன்படுத்தும் அவல நிலையில் வாழ்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் 16 அகதிகள் முகாம்களில் மக்கள் அவல நிலையில் வாழ்ந்து வருவது, தெற்கில் உள்ள  மக்களுக்கு மட்டுமல்ல, வடக்கில் உள்ள பல்களைக்கழக பேராசிரியர்களுக்கு கூடத்தெரியாதென அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கில் 90 சதவீதமான  காணிகள் மக்களிடம் வழங்கப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ள போதும் இன்னும் பெருமளவிலான மக்களின் நிலங்கள் மற்றும் பொது இடங்களை அரச படையினர் தம் வசம்  அபகரித்து வைத்துள்ளனர் என்றும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

வருட இறுதிக்குள் மக்களின் நிலங்கள் கையளிக்கப்பட்டுவிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்த போதும் இதுவரையில் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவிலலை என்றும் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரச படையினர் அரசாங்கத்திடம் பணம் கேட்பது கேலிக்குறியதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave Comments

Comments (0)