நாட்டு மக்கள் ஜம்மு காஷ்மீருடன் தொடர்பு கொள்வது அவசியம்-  உச்சநீதி மன்றம்

/files/detail1.png

நாட்டு மக்கள் ஜம்மு காஷ்மீருடன் தொடர்பு கொள்வது அவசியம்-  உச்சநீதி மன்றம்

  • 0
  • 0

 

சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோர் ஜம்மு காஷ்மீருக்குச் செல்லலாம் என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய பாஜக அரசு அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 மற்றும் சட்டப்பிரிவு 35ஏ ஆகியவற்றை அதிரடியாக நாடாளுமன்றத்தில் ரத்து செய்ததைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் பிரதேசம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டு எதிர்க்கட்சி தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான முகமது யூசப் தாரிகாமி எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவருடைய உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் டி. ராஜா ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 09ஆம் தேதி தோழர் முகமது யூசப் தாரிகாமியையும் மற்றும் சிறைபிடிக்கப்பட்டுள்ள தலைவர்களையும், ஜம்மு - காஷ்மீர் மக்களையும் சந்திப்பதற்காகச் சென்றனர். ஆனால், அவர்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே தடுத்துநிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து முகமது யூசுப் தாரிகாமியை ஒப்படைத்திட வேண்டும் என வலியுறுத்தி சீத்தாராம் யெச்சூரி உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருக்கிறார். 

இதுதொடர்பாக நடந்த விசாரணையில், ”நாட்டு மக்கள் ஜம்மு காஷ்மீருடன் தொடர்பு கொள்வது அவசியம். சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோர் ஜம்மு காஷ்மீருக்குச் செல்லலாம். கட்சி நிர்வாகி யூசூப்தாரிகாமியை நண்பராகச் சந்திக்கலாம். ஆனால் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

Leave Comments

Comments (0)