தமிழர்களை கடத்திய படைத்தளபதி சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பு!

/files/detail1.png

தமிழர்களை கடத்திய படைத்தளபதி சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பு!

  • 0
  • 0

இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் தளபதி ரவீந்திர குணவர்த்தன நேற்றுக் காலை முகத்திடலில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் தலைநகர் பொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அவர், தற்போது பிணையில் உள்ளார்.

இந்நிலையில் நேற்றைய சுதந்திர தின நிகழ்வில் அவர் பங்கேற்றமை, பிணையில் உள்ள ஒருவர் எவ்வாறு அரச நிகழ்வொற்றில் பங்குபற்ற முடியும் என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த 2008, 2009ம் ஆண்டு காலப்பகுதிகளில் கொழும்பு மற்றும் அதன் புற நகர்ப்பகுதிகளில் வைத்து 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.

மகிந்த ராஜபக்சே ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில், நல்லாட்சி அரசாங்கம் என்று தன்னைப் பிரகடனப்படுத்தியுள்ள மைத்திரியின் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் படி கடற்படையின் முன்னாள் பேச்சாளர் உள்ளிட்ட  அறுவர் கைது செய்யப்பட்ட போதும் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாதுகாப்புப் படைகளின் தளபதி ரவீந்திர குணவர்த்தன, நேற்று நடைபெற்ற 71ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றிருந்தமை தமிழ் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave Comments

Comments (0)