பெங்களுரில் மகிந்த ராஜபக்சே- வலுக்கும் எதிர்ப்புக்கள்

/files/detail1.png

பெங்களுரில் மகிந்த ராஜபக்சே- வலுக்கும் எதிர்ப்புக்கள்

  • 0
  • 0

 

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சே இந்தியாவிற்கு பயணம் உள்ளார்.

இந்து நாளிதல் குழுமத்தினால் வெளியிடப்படும் The Huddle சஞ்சிகையின் மூன்றாவது வெளியீட்டில் சிறப்புரையாற்றுவதற்கு மகிந்த ராஜபக்சேவுக்கு இந்து பத்திரிகையின்  பத்திரிகையின் முகுந் பத்மநாபன் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான நிகழ்ச்சி வரும் 9ம் திகதி பெங்களுரில் நடைபெறவுள்ளது. 

இந்நிகழ்வில் பங்குகொள்வதற்காக எதிர்க்கட்சித்தலைவர் மகிந்தராஜபக்சேவுடன் முன்னாள் அமைச்சர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்தியா மற்றும் உலக நாடுகளைச்சேர்ந்த அரசியல்வாதிகள் உட்பட பல்துரைசார்ந்தவர்கள் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் எனத்தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மகிந்த ராஜபக்சேவின் இந்திய பயணத்திற்கு எதிர்ப்புக்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளது. இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான போரில் மகிந்த ராஜபக்சே மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக மகிந்த ராஜபக்சே இந்தியாவிற்கு செய்த பல பயணங்களுக்கு பலத்த எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave Comments

Comments (0)