இலங்கையில் வடபகுதியில் பெருமளவிலான வெடிபொருட்கள் மீட்பு

/files/detail1.png

இலங்கையில் வடபகுதியில் பெருமளவிலான வெடிபொருட்கள் மீட்பு

  • 0
  • 0

இலங்கையில் வடபகுதியில் அமைந்துள்ள வடமராட்சி கிழக்கு  அம்பன் பகுதியில் விவசாய தேவைக்காக நிர் பெறுவதற்க்கு jcp மூலம் துரவு (நீர் பெறும்அகழி) வேட்டியபோது பல மேட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியிலேயே இந்த மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இது பல வருடங்கள் பழமை வாய்த குண்டுகளாக  இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

இது தொடர்பாக   இராணுவத்தினருக்கு அறவிக்கப்பட்ட நிலையில், இராணுவ புலனாய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று  விசாரணைகளை  நடத்தி வருகின்றனர்.

alt text

30 வருடத்திற்கும் மேலான இலங்கை உள்நாட்டுப் போரில், தமிழர் நிலப்பரப்பான வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலக்கண்ணிவெடிகள், போர்விமானங்களினால் வீசப்பட்ட வெடிக்காத குண்டுகள், பாதுகாப்பு கருதி புதைத்து வைக்கப்பட்ட குண்டுகள் என பெருமளவினால குண்டுகள் நிலத்தின் கீழ் புதைந்து கிடக்கின்றன.

கடந்த 2009 போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின், சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் நிலக்கண்ணி வெடிகள் மீட்கப்பட்டு வருகின்ற போதும் இன்னும் பல இடங்களில் கண்டுபிடிக்கப்படாத குண்டுகள் புதைந்து கிடப்பதோடு, பல உயிர்கள் பலியாகி வருகின்றது. மேலும்  குழந்தைகள் பெரியவர்கள் என காயமடைந்தும் ஊனமுற்றும்  வருகின்றனர்.

alt text

இலங்கை அரசாங்கம் போரின் பின் மக்களை மீள்குடியேற்றம் செய்யும் போது சீரான முறையில்  நிலக்கண்ணி வெடிகளை அகற்றாமல் மீள் குடியேற்றம் செய்தமையினால் உயிரிழப்புக்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். இவ்வாறான சில வெடிபொருட்கள் மட்டுமே பாதுகாப்பாக மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave Comments

Comments (0)