தனி நாடு தேவையில்லை - எம்.ஏ. சுமந்திரன் கருத்து

/files/detail1.png

தனி நாடு தேவையில்லை - எம்.ஏ. சுமந்திரன் கருத்து

  • 0
  • 0

 

இலங்கையில் சமஷ்டி கோரிக்கையை கைவிட்டு விட்டு தாம் மத்திய நிலைக்கு தற்போது வந்திருப்பதாக தெரிவித்த எம்.ஏ. சுமந்திரன், தனி நாடு வேண்டும் என்ற எண்ணத்தில் தாம் தற்போது இல்லை என்று கூறியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ. சுமந்திரன், தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்துதெரிவித்த போது  ஆட்சி முறையில் அதிகாரப் பரவலாக்கல் தமக்கு வேண்டும். அது சமஷ்டியாக இருக்க வேண்டியதில்லை என கூறியுள்ளார். 

தற்போது அரசியலமைப்பு சம்பந்தமான அறிக்கையே சமர்பிக்கப்பட்டிருப்பதாகவும், அது தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போது நாட்டின் பெயர் ஜனநாயக சோசலிச குடியரசு என்று இருப்பதாகவும், ஜனநாயகம், சோசலிசம், குடியரசு என்று இல்லாமல் இலங்கை என்று மாத்திரம் அழைப்பது தொடர்பிலும் கருத்துக்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இலங்கைக் குடியரசு என்று மாத்திரம் அழைப்பது தொடர்பிலும் கருத்துக்கள் நிலவும் நிலையில், இவை இரண்டில் ஒன்றுதான் இறுதியில் புதிய அரசியலமைப்பு ஊடாக நிறைவேற்றப்பட உள்ளதாக சுமந்திரன் கூறியுள்ளார் .

Leave Comments

Comments (0)