ஆம்புலன்ஸ் வசதி இல்லை: மகளின் சடலத்தைக் கையில் ஏந்தியபடி சென்ற தந்தை

/files/detail1.png

ஆம்புலன்ஸ் வசதி இல்லை: மகளின் சடலத்தைக் கையில் ஏந்தியபடி சென்ற தந்தை

  • 0
  • 0

 

தெலங்கானாவில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் இறந்த தனது மகளின் உடலை கண்ணீருடன் கையில் ஏந்தியபடி சென்ற தந்தையின் நிலை பலரையும் வேதனையடைய செய்திருக்கிறது. 

தெலங்கானா மாநிலம் பொத்தப்பள்ளி மாவட்டம் கூனுறு கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத். இவருடைய 7 வயது மகள் கோமலாவிற்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக கரீம்நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சம்பத் கொண்டுவந்து சேர்த்தார். அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 03) சிகிச்சை பலனின்றி கோமலா உயிரிழந்தார். கையில் பணமில்லாத நிலையில் மருத்துவமனையின் சார்பில் சொந்த ஊருக்குத் தனது மகளின் சடலத்தைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்படுத்தித்தர வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திடம் சம்பத் கேட்டுக்கொண்டார்.

alt text

ஆனால் மருத்துவமனை நிர்வாகமோ ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்று மறுத்துவிட்டது. இதனையடுத்து செய்வதறியாமல் தவித்த சம்பத், தனது மகளின் சடலத்தைக் கண்ணீருடன் கையில் ஏந்தியபடி மருத்துவமனைக்கு வெளியே வந்து ஆட்டோ ஓட்டுநர்களிடம் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் எனக் கேட்டார். பலர் நிராகரித்த நிலையில் ஒரு ஆட்டோ டிரைவர் மட்டும் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றார். 
 

Leave Comments

Comments (0)