புதிய கல்விக் கொள்கை: நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

/files/detail1.png

புதிய கல்விக் கொள்கை: நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

  • 0
  • 0

 

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியையும் அதன் வழியாகச் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையைப் பலரும் எதிர்த்துவருகின்றனர். மையமாக்குதல், சாதியமயமாக்கல், வணிகமயமாக்கல் ஆகிய மூன்று கருத்துக்களை மையப்படுத்தி இந்த கொள்கை முறை இருப்பதாகவும், அனைத்து மக்களுக்குமான கல்விக் கொள்கையாக இல்லாமல், இது கல்வியைச் சர்வதேசச் சந்தையில் கடைவிரிக்கும் கார்ப்பரேட் நலனாக இருக்கிறது என்றும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்புகள் வழுபெற்றுவருகிறது. இந்த முறையை ரத்து செய்யக்கோரித் தொடர் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடந்தவண்ணம் உள்ளன. 

இந்நிலையில், நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, `புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட் தேர்விற்கு` எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இத்திட்டங்களை மத்திய அரசு உடனடியாக கைவிடாவிட்டால்,  பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெறும் என்று கூறிய அவர்கள், மத்திய, மாநில அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பினர்.

Leave Comments

Comments (0)