புதிய அரசியலமைப்பு விவகாரம்- தமிழர்களுக்கு ஜனாதிபதி கண்டனம்

/files/detail1.png

புதிய அரசியலமைப்பு விவகாரம்- தமிழர்களுக்கு ஜனாதிபதி கண்டனம்

  • 0
  • 0

 

புதிய அரசமைப்பு பற்றி பேசுவது தெற்கில் உள்ள பௌத்த மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்துவதுடன் மறுபுறத்தில் அது வடக்கு மக்களை ஏமாற்றுவதாகும் என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் புதிய அரசியல் அமைப்பு குறித்து பேசி வருகின்ற போதும் இதுவரையில் அப்படியொன்று தனக்கு கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,சிறந்தோர் நாட்டைக்கட்டியெழுப்புவதற்கு அரசமைப்புமாற்றம் அவசியம் என்ற போதும் அதன் மூலம் நான் எதிர்பார்ப்பது நாடாளுமன்றத்தைப் பலப்படுத்தும் மாற்றமேயன்றி வேறு நோக்கங்களை அடைந்துகொள்வதற்கான மாற்றம் அல்ல.

2019ம் ஆண்டு தேர்தல் நடைபெறும் ஆண்டாக உள்ள போதும் இந்த ஆண்டுக்குள் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்படும் என சிலர் கூறுகின்றனர் ஆனால் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள். அரசமைப்பு திருத்தமொன்று செய்வதாயின் பலமான நாடாளுமன்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.

மேலும் சிங்கள,தமிழ்,முஸ்லீம் ஆகிய அனைத்து மக்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தையும் தேசிய ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் அதே நேரம்அனைத்து மக்கள் மத்தியிலும் அச்சத்தையும் பீதியையும் ஒழிக்கின்ற அரசியல் முறைமை ஒன்றையும் சமூக சூழலையும் கட்டியெழுப்புவது முக்கியம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Leave Comments

Comments (0)