புதிய அரசியல் அமைப்பு புலிகளுக்காகவா? பிரசன்ன ரணதுங்க சாடல்

/files/detail1.png

புதிய அரசியல் அமைப்பு புலிகளுக்காகவா? பிரசன்ன ரணதுங்க சாடல்

  • 0
  • 0

புலம்பெயர்ந்து வாழும் விடுதலைப்புலிகளின் தேவைகளுக்காகவேதான் புதிய அரசமைப்புச்சட்டம் கொண்டுவரப்படுகின்றது என மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த சதித்திட்டத்தை முறியடிக்காது விட்டால் நாட்டைப்பாதுகாக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பூமி இளைஞர் யுவதிகளுக்கு புதியதல்ல எனத்தெரிவித்த பிரசன்ன ரணதுங்க, 1988,1989 காலங்களில் கலவரங்கள் நடைபெற்ற போது கடத்தப்பட்டிருந்த இளைஞர்களை காப்பாறியதாகவும் தற்போது யானை புலி ஆகிய சின்னங்களைக்கொண்ட கட்சிகளே இலங்கையை அழித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் நலனுக்காக கொண்டுவரப் படவுள்ளதாகக் கூறப்படும் புதிய அரசியல் அமைப்பு விடுதலைப்புலிகளின் தேவைப்பாடாகும். இதற்கு மக்கள் விடுதலை முன்னணியும் உடந்தையாக உள்ளது.

இந்நிலையில், இந்த சதித்திட்டத்தை முடிவுக்கு கொண்டுவராவிடின் நாட்டைப்பாதுகாக்க முடியாது. இதனால் இளைஞர்,யுவதிகளும் அரசின் திட்டங்களை கருத்தில்கொண்டு செயலாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Leave Comments

Comments (0)